பசலைக்கீரையில் இவ்வளவு பயன்களா..? | Pasalai Keerai Health Benefits in Tamil

Pasalai Keerai Benefits

பசலைக்கீரை நன்மைகள் | Pasalai Keerai Benefits in Tamil

Pasalai Keerai Benefits:- ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய பதிவில் பசலைக்கீரை மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக கீரை வகைகளை நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம். அந்த வகையில் அதிக ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ள பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நம் உடலை எந்த ஒரு நோய்களும் அண்டாது. அதேபோல் உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் இந்த பசலைக்கீரைக்கு இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கும். இது போன்று ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு இந்த பசலைக்கீரை அள்ளித்தருகின்றது. பசலையில் பலவகைகள் இருக்கின்றன இந்த கீரையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சரி வாங்க இந்த பதிவில் பசலைக்கீரை பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

40 கீரை வகைகள் அதன் பயன்களும்..!

பசலைக்கீரை பயன்கள் – Pasalai Keerai Benefits 

இரத்த உற்பத்திக்கு:-

உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஆகவே பசலைக்கீரையை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம், உடலில் புதிய ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

வேர்க்குரு குணமாக:-

பொதுவாக கோடை காலம் வந்து விட்டால் அதனுடன் ஏராளமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படும். அந்த வகையில் கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வேர்க்குரு. இதனை சரி செய்ய பசலைக்கீரையின் இளம் தண்டு பயன்படுகிறது. அதாவது பசலைக்கீரையின் தண்டினை அரைத்து வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்தால் இந்த வேர்க்குரு பிரச்சனை குணமாகும். அதேபோல் வேர்க்குரு பிரச்சனையால் ஏற்படும் எரிச்சல்களும் குணமாகும்.

உடல் சூடு குணமாக:-

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்பட கூடிய பிரச்சனைகள் என்று பார்த்தால் கண் எரிச்சல், நீர்க்குத்தல், சிறுநீர் எரிச்சல், வெள்ளை படுத்தல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். ஆகவே இவற்றில் இருந்து தப்பிக்க பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.

பசலைக்கீரை பயன்கள் – Pasalai Keerai Benefits:-

பசலைக்கீரை பயன்கள்

கால் மூட்டுகளில் வரக்கூடிய வாத பிரச்சனை குணமாக, மலச்சிக்கல் பிரச்சனை குணமாக, தொப்பையை குறைக்க இது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சை முறையை தேடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு. இந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாக பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்.

முக பருக்கள்  நீங்க:-

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் முகப்பரு. இதனை குணப்படுத்த பசலைக்கீரையின் சாறை எடுத்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர முப்பரு குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனை குணமாக:-

மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் இந்த பசலைக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சனை குணமாகும். அதாவது சில பெண்களுக்கு சரியான இடைவெளியில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாது. அப்படிபட்ட பெண்கள் இந்த பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.

ஆசனவாய் எரிச்சல் குணமாக:-

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் சிலருக்கு ஆசனவாயில் புண், கட்டி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஆகவே அந்த பிரச்சனைகள் குணமாக பசலைக்கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டுவர ஆசனவாயில் ஏற்படும் புண், கட்டி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியம்