Pathimugam Benefits and Side Effects in Tamil | பதிமுகம் பட்டை பயன்கள்
பொதுவாக சிலர் தினமும் ஒவ்வொரு மருத்துவத்தை பற்றி படித்தோ அல்லது அனுபவப்படியோ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு ஆரோக்கிய குறிப்பை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது நம்மில் சிலர் பதிமுகம் என்ற ஒன்றை கேள்வி பட்டிருப்போம். ஆனால் பதிமுகம் என்றால் என்ன..? எங்கு அது கிடைக்கும்..? அதனுடைய சிறப்புக்கள் என்னென்ன என்று நமக்கு தெரியாமலே இருக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சிலருக்கு பதிமுகம் என்றால் என்ன என்றுகூட தெரியாது.
நாம் பலரும் கேள்வி படாத பதிமுகம் மருத்துவ குணங்கள் அடங்கியது. இந்த மரம் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருப்பது இல்லை. அதாவது கேரளாவில் மட்டும் தான் உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் இதனை பற்றிய முழு தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பதிமுகம் என்றால் என்ன: | Pathimugam Endral Enna..?
பதிமுகம் என்பது ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த பதிமுகம் கேரளா பகுதியில் வளரக்கூடிய மூலிகை மரமாகும். ஏனென்றால் கேரளா பகுதிகளில் உள்ள தட்ப வெப்ப நிலையின் காரணமாகவே அங்கு இந்த மரங்கள் வெகு விரைவாக வளர்கிறது. இப்படிப்பட்ட பதிமுகம் பட்டை பெரும்பாலும் நாட்டு மருந்து கடையில் மட்டுமே கிடைக்கும். பதிமுகத்தை தண்ணீரில் சேர்க்கும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
பதிமுகம் பட்டையில் ஆன்டிபயாட்டிக்குகள் அதிகமாக உள்ளது. இதன் ஆங்கில பெயர் பியான்சியா சப்பனின் பட்டை. Fabaceae என்ற குடும்பத்தை சேர்ந்தது. இந்த மரம் இந்தோ மலேசியப் பகுதியில் அதிகமாக வளரக்கூடியது. கேரளாவில் உள்ள தட்ப வெப்ப நிலையால் எளிதில் வளருகிறது. பதிமுகத்தின் பட்டை கருங்கழி என்றும் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் சப்பாங்கம் என்றும், இந்தியாவில் படுங்க என்றும், கர்நாடகத்தில் சப்பாங்கா என்றும், மராத்தியில் பதாங் என்றும், தமிழில் பதிமுகம் என்றும். அழைக்கப்படுகிறது.
பதிமுகத்தின் நன்மைகள்| Pathimugam Water Benefits Tamil:
- பதிமுகமானது நமது உடலில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவினை கட்டுக்குள் வைக்க மிகச் சிறந்த ஒரு மருந்தாக கருதப்படுகிறது.
- அதேபோல் பதிமுகத்தில் பிரேசிலின் என்ற ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதனால் இதனை நாம் வாய் கொப்பளித்தால் நமது பற்களுக்கு சிதைவு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும். அதுமட்டும் இல்லாமல் நமக்கு ஏற்படும் பற் சிதைவில் இருந்தும் பாதுகாப்பு ஏற்படும்.
- மேலும் இந்த பதிமுக நீர் அளவுக்கு அதிகமான கொழுப்ப, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் என இவற்றையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- இத்தகைய பதிமுக நீரை நாம் அருந்துவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல் இதில் சபோனின், பிரேசிலின் போன்ற சேர்மங்கள் காணப்படுவதால் காய், கால்களில் ஏற்படும் புண் மற்றும் வீக்கம் என இவற்றையும் குணப்படுத்துகிறது.
பதிமுகத்தின் தீமைகள்| Pathimugam Water Side Effects in Tamil:
- பதிமுகம் தண்ணீர் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளித்தாலும் கூட இதில் காணப்படும் பிரேசிலியன் ஆனது எலிகளில் இனப்பெருக்க நச்சுத்தன்மை ஏற்படுத்த முக்கியமான ஒன்றாக இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கூறப்படுகிறது.
- இத்தகைய காரணத்தினால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் என இவர்கள் பதிமுகம் தண்ணீரை குடிக்காமல் இருப்பதன் மூலம் தீமைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.
- உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றைக்கு மருந்து உட்கொள்ளும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி இந்நீரை எடுத்துக்கொள்வது நல்லது.
பதிமுகம் தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் மற்றும் பதிமுகம் பட்டை என இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக இளஞ்சிவப்பு நிறம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த தினமும் தண்ணீரை குடித்து வர எல்லா ஆரோக்கியமும் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |