பட்டையை பிரியாணியில் சேர்ப்பதற்கு முன் அதனுடைய தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

பட்டை தீமைகள்

பொதுவாக இலவங்கப்பட்டையை அசைவ குழம்பு மற்றும் சைவ பிரியாணி, அசைவ பிரியாணியில் சேர்ப்பார்கள். இதனை சேர்ப்பதால் உணவு வாசனையாகவும், சுவையாகவும் இருப்பதற்கு உதவி செய்கிறது. இதனை பயன்படுத்துவதால் நன்மைகள் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதனை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையும் ஏற்படுத்தும். அது என்னென்ன பிரச்சனை என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

இலவங்கப்பட்டை தீமைகள்

கல்லீரல் பிரச்சனை:

lavanga pattai theemaigal

 இலவங்கப்பட்டையில் உள்ள கூமரின் கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தும். முக்கியமாக கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனையை அதிகப்படுத்தும். அதனால் அடிக்கடி பட்டையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து கொள்ளவும். 

இரத்த சர்க்கரை அளவு:

இரத்த சர்க்கரை அளவு

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இருந்தாலும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைய செய்யும். எனவே உங்களுக்கு இரத்த சர்க்கரை பிரச்சனை இருந்தால் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வேம்பாளம் பட்டை பயன்கள்..!

வாய்ப்புண் பிரச்சனையை ஏற்படுத்தும்:

இலவங்கப்பட்டையில் சின்னமால்டிஹைடு உள்ளது. இதனால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தி, நாக்கில் வீக்கம், எரிச்சல் உணர்வு, வாயில் வெள்ளை திட்டுகள் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

சுவாச பிரச்சனை:

பட்டை தீமைகள்

பட்டையை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதால் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும், ஏனென்றால் சின்னமால்டிஹைட்  தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தி சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும்.

புற்று நோய் பிரச்சனை:

இலவங்கப்பட்டையில் இருக்கும் கூமரின் ஆனது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

யாரெல்லாம் இலவங்கப்பட்டை சாப்பிட கூடாது:

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் உணவில் இலவங்கப்பட்டையை தவிர்ப்பது நல்லது. 

குழந்தைகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணி போன்றோர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்து கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். அதனால் உங்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பட்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement