சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம்..! Patti vaithiyam for sinus in tamil..!

Advertisement

சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் (Home Remedies For Sinus In Tamil)

Patti vaithiyam for sinus in tamil:- சைனஸ் பிரச்சனையானது இப்போது பெரும்பாலரை தாக்கியுள்ள ஒரு நோயாகும். அதுவும் குறிப்பாக பனிக்காலத்தில் இதனால் பலர் அவதிப்படுகின்றனர். இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது.

சரி இந்த சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் / சைனஸ் குணமாக சித்த மருத்துவம் (patti vaithiyam for sinus in tamil) என்ன உள்ளது என்று  நாம் படித்தறிவோம் வாங்க..!

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..!

சைனஸ் என்றால் என்ன?

மனிதனுடைய முகபக்கம் உள்ள மண்டை ஓட்டு பகுதியில் குழிகள் போன்ற பள்ளங்கள் மூக்கின் இரு பக்கம், நெற்றி மற்றும் புருவம் ஆகிய பகுதிகளில் உள்ளன. இவையே சைனஸ் என்று அழைக்கபடுகிறது.

சைனஸ் என்பது வியாதியின் பெயர் அல்ல சைனுசைட்டீஸ் என்பதே நோயின் பெயரை குறிப்பிடுகிறது. இதனையே சித்தர்கள் பீனிசம் என்று கூறினார்கள்.

சைனஸ் குழி அமைப்பின் வேலை என்ன?

இந்த சைனஸ் குழிகள் நாம் உள் இழுக்கும் சுவாச காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப சமபடுத்தி நுரையிரலுக்கு அனுப்பி வைப்பது. சைன்ஸ் பகுதி தனது வேலையை செய்ய தவறினால் சுவாசிக்கின்ற சூடான காற்று, தூசுகள் நேரடியாக நுரையிரல் சுவாச குழாய்களை பாதித்து புண்கள் உண்டாக்கி நாஞ்சிலில் எரிச்சலை ஏற்படுத்தும்.

siddha maruthuvam for sinus

சைனஸ் ஏன் பாதிப்பு அடைந்து சைனுசைட்டீஸ் உண்டாகிறது?

குளிர்ச்சியான பானங்கள், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடைந்த காற்றை சுவாசிப்பது, இரவு நேரத்தில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளிப்பது, குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுவதாலும் சைனஸ் மண்டலம் பாதிக்கபட்டு, முதலில் நீர் கோர்க்கும், பின் நாம் சுவாசிக்கும் காற்றால் அந்நீர் தொடர்ந்து மாசுபட்டு நோய் கிருமிகள் உண்டாகிறது. தேங்கிய நீர் அடுத்த நிலைக்கு சென்று சீல் பிடித்து சுவாசிக்கும் போது ஒரு வித நாற்றத்தை உண்டாக்குகிறது. இவ்வாறு தான் சைனுசைட்டீஸ் உண்டாகிறது.

சைனஸ் அறிகுறி (Sinus Symptoms)

  • மேல் தாடை, கீழ் தாடைகள் இணையும் பகுதி மற்றும் முகத்தில் வலி உண்டாகும். குறிப்பாக மூக்கைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக வலியை உணரக்கூடும்.
  • சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும்.
  • வாய் மற்றும் மூக்கில் சுவாசிக்கும் போது சுவாசத்தில் நாற்றம் வருதல்.
  • காதின் மடல் பகுதியில் வலி உண்டாகும். காது கேட்கும் திறனில் மந்த நிலை உண்டாகும்.

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்

சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் / patti vaithiyam for sinus in tamil

  1. அதிமதுரம்.
  2. ஆடாதோடை.
  3. கண்டங்கத்திரி.
  4. சித்தரத்தை.
  5. தாளிசப்பத்திரி.
  6. திப்பிலி.

சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் / patti vaithiyam for sinus in tamil செய்முறை

patti vaithiyam for sinus in tamil / சைனஸ் குணமாக சித்த மருத்துவம்:- சைனஸ் குணமாக இயற்கை மருத்துவம், மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து சலித்து, வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும். 1ஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் அருந்தவும்.

இந்த சைனஸ் குணமாக இதை தவிர ஒரு சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை. எனவே சைனஸ் குணமாக இந்த பாட்டி வைத்தியம் குறிப்பினை பின்பற்றுங்கள்.

பயன் மற்றும் சாப்பிடும் முறை

சைனஸ் பாட்டி வைத்தியம்:- சளி, சைனஸ் குணமாக, தொண்டை கமறல், சளியிருமல், வறட்டு இருமல், மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா வரை நுரையீரல் சம்பந்தமான வெகு நோய்களை குணப்படுத்தும்.

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement