வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பீச் பழத்தின்  மருத்துவ பயன்கள் 

Updated On: October 14, 2025 2:41 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Peach Fruit Benefits In Tamil

இன்றைய பதிவில் பீச் பழத்தின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்க போகின்றோம். பீச் பழத்திற்கு  குழிப்பேரி என்று மற்றொரு பெயரும் உண்டு. அதிக இனிப்பு சுவையை கொண்ட பீச் பழம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மையை அளிக்கிறது. அதேபோல் இந்த பழமானது ஆப்பிள் பழத்தினை போன்ற தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். பொதுவாக இந்த குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழம் முதன்முதலில் வடமேற்கு சீனாவில் தோன்றின. இது கல் பழக் குடும்பத்தை சேர்ந்தது.

மேலும், இது அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இந்த பழத்தை பச்சையாகவும், சுட்டும், ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். இப்பழங்களில் உயிர்ச்சத்துக்களும், தாதுப்பொருட்களும்,பொட்டாசியம், புளோரைடுகள், இரும்பு மற்றும் பீட்டாகரோடினும் அதிகம் உள்ளன. மேலும் இதில் 40% மட்டுமே கலோரி உள்ளது. பீச் பழங்களில் அதிக நன்மைகள் உள்ளன அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு:


கல்லீரல் பாதிப்பை தவிர்க்க எந்த உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டும்? |  லைஃப்ஸ்டைல் - News18 தமிழ்

பீச் பழத்தில் ஆன்டி ஆக்சிடெண்ட் உடலில் இருக்கும்  கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள்ள உறுப்புகளை சுத்தம் செய்ய உதவுகிறது. குறிப்பாக கல்லீரலை சுத்தம் செய்து ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.  பீச் பழத்தில் ஒரு தினமும் துண்டு  சாப்பிடும் போது  கல்லீரலை பாதுகாப்பாக  வைத்திருக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு: 

பீச் பழத்தை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்களும் ,மினரல்களும் இரத்தம் உறைதல் தடுத்து  இரத்த குழாயில் கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது. பீச் பழம் உயர் இரத்த அழுத்தத்தையும்,கொலஸ்ட்ரால் பிரச்சனையும் சரிசெய்கிறது.

ஜீரண மண்டலத்தை அதிகரிக்கிறது :

பீச் பழத்தில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக இருக்கின்றன. இதில் அதிகமான  நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை ஜீரண மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது. பீச் பழத்தில் எளிதில் கறையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால். நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை சரிசெய்து அஜீரண கோளாறு மற்றும் கல்லீரல் வீக்கம், ஆக்சிஜனேற்ற அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சரும பிரச்சனைக்கு தீர்வு :

  பீச் பழத்தில் அதிகமான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. பீச் பழத்தில் இருக்கும் கரிம சேர்மங்கள் சரும பிரச்சனையை சரி செய்கிறது. மேலும், இது சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு:

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன?  - BBC News தமிழ்

பீச் பழங்கள் யூரிக் அமில அளவை குறைப்பதன் மூலம் சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. பீச் பழம் சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சிறுநீரக பிரச்சனையை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருவுறுதலை மேம்படுத்துகிறது:

பீச் பழத்தில் ஃபோலேட் இனப்பெருக்க ஆரோக்கியத்தை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபோலேட் பிறப்பு அபாயத்தை குறைப்பது மட்டுமின்றி விந்து உற்பத்தியை ஏற்படுத்தி ஒட்டுமொத்த கருவுறுதல் போன்றவற்றை ஆதரிக்கிறது.

எலும்புகளை வலுபடுத்துகிறது :

Healthy Bones Tips: எலும்புகளை வலுப்படுத்த இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்! |  OnlyMyHealth

பீச் பழத்தில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

திராட்சை பழம் நன்மைகள் | Grapes Benefits in Tamil

பீச் பழத்தின் ஊட்டச்சத்துக்கள் :

  • கலோரி 
  • புரதம் 
  • கொழுப்பு 
  • சர்க்கரை 
  • வைட்டமின் சி 
  • வைட்டமின் ஏ 
  • பொட்டாசியம் 
  • நியாசின் 
  • மாங்கனீசு 
  • வைட்டமின் ஈ 
  • வைட்டமின் கே 
  • செம்பு 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now