Pirandai Uppu Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பிரண்டை உப்பின் பயன்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பிரண்டை பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். அவை மிகவும் மருத்துவ குணமுடைய தாவரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் பிரண்டையிலிருந்து தயாரிக்க கூடிய பிரண்டை உப்பை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. எனவே பிரண்டை உப்பின் பயன்கள் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..! |
பிரண்டை உப்பின் பயன்கள்:
பிரண்டை உப்பை சுமார் 300 மில்லி கிராம் தேனில் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் பருமன் குறைய தொடங்குகிறது.
2 அல்லது 3 கிராம் பிரண்டை உப்பை பாலில் கலந்து குடித்து வர உடல் பருமனை குறைகிறது. மேலும் ஊளைச்சதைகளையும் குறைக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இடுப்பு வலிக்கு பிரண்டை துவையல் அல்லது பிரண்டை உப்பை பயன்படுத்தினால் வலியிருந்து விடுபடலாம். மேலும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு பிரண்டை உப்பு அறிய மருந்து.
2 கிராம் பிரண்டை உப்புடன் 5 கிராம் ஜாதிக்காய்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறு பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் உடல் வலிமையையும் பெரும்.
வாய்ப்புண், வாய் துருநாற்றம் மற்றும் உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, பிரண்டை உப்புடன் வெண்ணெய் சேர்த்து கலந்து தடவினால் மூன்று நாட்களில் வாய்ப்புண் பிரச்சனை தீரும்.
எனவே வாயில் ஆரமித்து ஆசனவாய் முதல் ஏற்படும் 300 விதமான நோய்களுக்கும் பிரண்டை சிறந்த மருந்து என்று போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் அனைத்தும் பிரண்டையின் மூலம் சரியாகும் எனவும் கூறப்படுகிறது.
கருப்பு உப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | udal edai athikarikka tips |