கொத்துப்பேரி பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா? | Plum Fruit Benefits in Tamil

Plum Fruit Benefits in Tamil

பிளம்ஸ் பழம் பயன்கள் 

நண்பர்களே வணக்கம் ஆரோக்கியம் பதிவில் கொத்துப்பேரி பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இந்த பழம் அதிகம் குழந்தைகள் தான் விரும்பி சாப்பிடுவார்கள் காரணம் இந்த பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மிகவும் சிறிய பழமாக இருக்கும். இந்த பழத்திற்கேற்று தனிப்பெரும் சிறப்புகள் உள்ளது. அதன் பின்பு இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம். பிளம்ஸ் அதிகளவு வெளி மாநிலங்களில் உற்பத்தியாகிறது. இதன் சுவையானது இனிப்பாகவும் இருக்காது கசப்பாகவும் இருக்காது, அதேபோல் புளிப்பாகவும் இருக்காது இது போன்ற சுவையான செய்திகளுடன் இந்த பதிவை முழுமையாக படித்து பிளம்ஸ் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி தெளிவாக படித்தறிவோம்.

பிளம்ஸ் பழம் பயன்கள்:

பிளம்ஸ் பழத்தில் குறைந்தளவு ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கிராம் கலோரிகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

முந்திரி பழம் நன்மைகள்

நார்ச்சத்து மிக்க பழங்கள்:

Plum Fruit Benefits in Tamil

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இந்த பிளம்ஸ் பழத்தில் உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த பழத்தில் அதிகம் நார்த்துக்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்களை அதிகம் இந்த பிளம்ஸ் பழம் கொண்டுள்ளது. உடலில் எலும்புகளை பலப்படுத்தும். தசைகளுக்கு மெக்னீசியம் சத்துக்களை அளிக்கிறது. அனைத்து உடல் உறுப்புகளும் சரியாக செயல்பட உதவியாக இருக்கிறது.

சாப்பிடும் உணவுகளை மிக விரைவில் எடுத்து செல்வது குடல் தான் செரிமானத்திற்கு எடுத்துச்செல்ல பெரிதும் உதவுகிறது.

எந்த நோயும் நம்மை தாக்காது, அதை தடுக்க இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அதனை தடுத்து உடலை காக்கவல்லது.

போலிக் அமிலம் எதற்கு பயன்படுகிறது:

உடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது போலிக் வேதிப்பொருள் தான் இந்த அமிலமானது பிளம்ஸ் பழத்தில் தான் உள்ளது. இந்த அமிலமானது கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் சத்துக்களை அளிக்கிறது. இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டுவது மிகவும் நல்லது. இனி கர்ப்பிணி பெண்கள் நிச்சயம் அதனை சாப்பிடலாம்.

சிறுநீரகம் பலம் பெற:

Plum Fruit Benefits in Tamil

நாம் சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் சத்துக்கள் நிறைந்தது அல்ல. ஏனென்றால் இப்போது  நாம் சாப்பிடும் பொருட்கள் பாதி துரித உணவு பொருட்கள் மட்டும் தான். அதனால் அந்த பொருட்கள் அனைத்திலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்திருக்காது அதிலிருந்து நம் உடலுக்கு நச்சுகள் சேர்ந்து உடல் உறுப்புகளை சீராக செயல்படாமல் இருக்கிறது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான். பிளம்ஸ் பழத்தை உணவில் தினமும் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தில் உள்ள நச்சிகளை வெளியேற்றி உடலில் உள்ள உறுப்புகளை சீராக பயன்படுத்துகிறது. முக்கியமாக சிறுநீரகம் பலப்பட்டு நன்றாக செயல்படவும் உதவிபுரிகிறது.

நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு

தலை முடி உதிர்வதை தடுக்க:

பிளம்ஸ் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால். இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவதால் முடி உதிர்வதை தடுத்து வளரவும் உதவி புரிகிறது. முடி உதிர்வதை மட்டும் தடுக்கும் என்பதை விட தலை முடி பிரச்சனை எதுவாயினும் பிளம்ஸ் பழம் பெரிதும் உதவுகிறது.

உடல் எடை போன்ற பல பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவிக்கிறது. இது அனைத்து செல்களின் வளர்சிதை மாற்றத்தை அளித்து உடல் பிரச்சனையிலிருந்து விடுபடுகிறது. இரத்தத்தில் உள்ளாகி சிவப்பு அணுக்களை அதிகமாக்குகிறது.

இந்த பழத்தை உட்கொள்ளுவ தால் மனதில் உள்ள கவலை, பதட்டம், படபடப்பு போன்ற பிரச்சனைலிருந்து விடுபடடும் இந்த பழம் உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள  சத்துக்கள் மூளையில் உள்ள நரம்புகள் செல்களில் ஏற்படும் இறுக்கத்தை கட்டுப்படுத்தி இயல்பாக வைத்திருக்க உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்