பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா..? அட என்ன சொல்றீங்க..!

Advertisement

Poondu Theemaigal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் ஆரோக்கியம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் உணவு பொருட்களில் பூண்டும் ஓன்று. நாம் சமைக்கும் உணவுகளில் கண்டிப்பாக பூண்டு சேர்ப்போம். காரணம் பூண்டில் அவ்வளவு பயன்கள் இருக்கின்றன. அப்படி பூண்டில் இருக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால், கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். ஓகே வாங்க பிரண்ட்ஸ் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்: 

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நாம் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால், அதை அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்து வருகின்றோம். ஆனால் அதையும் ஒரு அளவு தான் உட்கொள்ள வேண்டும். அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, பூண்டும் ஒரு அளவாக தான் உணவில் சேர்க்க வேண்டும். அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது இதனால் பல பாதிப்புகள் உண்டாகின்றது. சரி பூண்டு அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்போது பார்ப்போம்.

குறைந்த இரத்த அழுத்தம்: 

பொதுவாக குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது குறைந்த பிபி -ஐ உண்டாக்குகிறது. அதாவது ஹைபோடென்ஷனை ஏற்படுத்துகிறது. மேலும் இது உடலில் பலவீனம், பதட்டம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது.

நெஞ்செரிச்சல்:

நாம் அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிடும் போது, அது நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுத்துகிறது. பொதுவாக பூண்டில் அதிகளவு அமில கலவைகள் உள்ளன. ஆகவே அதை நாம் அதிகமாக உட்கொள்வதால் மார்பில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகிறது.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன் வறுத்த பூண்டு பயன்கள்

இரத்தப்போக்கு பிரச்சனை: 

பொதுவாக பூண்டில் இரத்தத்தை நீர்க்க செய்யும் (Blood Thinner) பண்புகள் அதிகம் உள்ளது.  ஆகையால், நாம் பூண்டு அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் அது இரத்தப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கல்லீரலை பாதிக்கிறது:

பூண்டில் அல்லிசின் என்ற கலவை அதிகம் இருப்பதால், அது கல்லீரலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும் கல்லீரலையும் பாதிக்கின்றது. எனவே கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் பூண்டு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சமையலுக்கு பூண்டை பயன்படுத்தினால் மட்டும் போதாது.! அதில் இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்: 

பொதுவாக பூண்டில் சல்பர் அதிகம் இருக்கிறது. ஆகவே நாம் அதை அதிகமாக சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. பூண்டில் உள்ள பல்வேறு இரசாயனங்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சருமத்தில் பாதிப்பு: 

பொதுவாக பூண்டில் அல்லினேஸ் என்ற நொதி உள்ளது. இது பொதுவாக தோல் வெடிப்புகளுக்கு காரணமாகும். பூண்டுகளை வெட்டும்போது கையுறைகளை அணிவது அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால், அதில் இருக்கும் நொதி சொறி மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும். இதனால் தோலில் அரிப்பு மற்றும் தடுப்புகளை உண்டாக்குகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement