பொட்டுக்கடலை நன்மைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆரோக்கியங்களை மேம்படுத்தும் பொட்டுக்கடலையின் நன்மைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொட்டுக்கடலையானது பருப்பு வகையை சேர்ந்தவையாகும். இதை உடைத்த கடலை என்றும் சொல்வார்கள். இவை சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் முகத்திற்கு அழகு சேர்ப்பதற்கு பயன்படுகிறது. இவை குழம்பின் சுவையை அதிகரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதோடு பெண்களின் ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இதில் அதிகமான புரோட்டின் மற்றும் மினரல்ஸ் உள்ளது. மேலும் பொட்டுக்கடலையை வெறுமையாக சாப்பிடுவது மட்டுமல்லாமல் ஸ்னாக்ஸ் செய்தும் சாப்பிடலாம். மேலும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பார்க்கலாம் வாங்க.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் |
பொட்டுக்கடலையின் நன்மைகள்:
பொட்டுக்கடலையை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்பு பகுதிகளை வலிமைப்படுத்துகிறது.
இதய சமத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பொட்டுக்கடலை முக்கிய பங்குவகிக்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகள் எளிதாக செரிமானம் அடைவதற்கு பொட்டுக்கடலை சிறந்தது. ஏனென்றால் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கும், தசைகள் வலிமையாகுவதற்கும் இந்த பொட்டுக்கடலையில் பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது.
குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது.
உடைத்த கடலையை அதிகம் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு அழகு சேர்க்கவும், சரும பிரச்சனைகளான படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.
இந்த பொட்டுக்கடலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து சரிசெய்து அடர்த்தியான முடி வளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறிய வயதில் வரும் இளநரை பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல் குறைபாடுகள் ஏற்படும் பொழுது பொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.
உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பொட்டு கடலை தினமும் சாப்பிடுவதால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
பெண்களுக்கான சிறப்பான நன்மைகள்:
பெண்கள் கர்ப்பம் அடைந்திருக்கும் பொழுது சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் தினமும் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்கு வரும் வயிற்று வழிகளில் இருந்து சரி செய்வதற்கும் மருந்தாக இருக்கிறது.
பெண்களுக்கான மாதவிடாய் நாட்களில் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரத்தப்போக்கு கட்டுப்பாட்டுக்குள் வர உதவியாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |