கர்பமாக இருப்பதை கண்டறிய உதவும் 10 அறிகுறிகள்..!

கருவுற்றதற்கான அறிகுறிகள்

கர்பமாக இருப்பதை கண்டறிய உதவும் 10 அறிகுறிகள்..!

ஒவ்வொரு பெண்களுக்கு கர்ப்பத்திற்கான அறிகுறிகள் வேறுபாடும். கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் தள்ளி போவது மட்டுமே கர்ப்பத்திற்க்கான அறிகுறிகள் இல்லை. மார்பகங்களில் வலி அல்லது தளர்வு ஏற்படுதல், முதுகு வலி, வாசனை உணர்வு என்று கர்ப்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப்ப அறிகுறிகள் கூட கண்டறியலாம். இருப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டால், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். குறிப்பாக கீழே குறிப்பிட்டுள்ள 10 அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால், கர்ப்பம் அடைந்திருப்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகளை பற்றி இப்போது பார்ப்போமா…

கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய என்ன செய்யலாம்?

கருவுற்றதற்கான அறிகுறிகள் – சோர்வு:

pregnancy symptoms tamil – சாதாரணமாக ஒரு வேலைவாயை செய்து கொண்டிருக்கும்போதே திடீரென அதிகம் சோர்வு ஏற்பட்டால்.

அது உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். பல கருவுறும் பெண்களுக்கு இந்த உடல் சோர்வு பிரச்சனை முதல் மூன்று மாதங்கள் வரை ஏற்படும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கருவுற்றதற்கான அறிகுறிகள் – குமட்டல்:

pregnancy symptoms tamil – இது பொதுவான அறிகுறி என்று சொல்லலாம். கருவுற்ற பெண்களுக்கு வருவானது ஆறு வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது, குமட்டல் பிரச்சனை ஏற்படும்.

இந்த குமட்டலானது காலை எழுந்தவுடன், மதியம் அல்லது இரவு நேரங்களில் கூட ஏற்படலாம். இந்த குமட்டல் பிரச்சனையானது 2-வது, 3-வது மாத கால கட்டத்தில் நுழையும் போது, பெருபாலும் குறைந்துவிடும்.

கருவுற்றதற்கான அறிகுறிகள் – அஜீரண கோளாறு:-

pregnancy symptoms tamil – இம்மாதிரியான சூழ்நிலையில் நன்கு பசியெடுக்கும், ஆனால் உணவு உண்டால் மந்தமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்றால் சிலவகை ஹார்மோன்கள் செய்யும் வேலை என்று சொல்லலாம்.

இந்த ஹார்மோன்கள் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். இதனால் உடலில் ஜீரண சக்தி மெதுவாக செயல்படும். இதன் காரணமாக மந்தமாக இருக்கும் மலச்சிக்கல் பிரசச்னையை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

கருவுற்றதற்கான அறிகுறிகள் – உடல் சூடாக இருக்கும்:

pregnancy symptoms tamil – வழக்கத்திற்கு மாறாக உடல் எப்போதும் சூடாக இருக்கும். இதற்கும் சில வகை ஹார்மோன் செய்யும் வேலையே காரணம்.

அந்த சமயத்தில் உங்கள் உடல் ஓய்வை மட்டுமே கேக்கும். குறிப்பாக சோர்வாகவே இருப்பீர்கள். காலை எழுந்தாலும் உற்சாகம் இருக்காது. அதிக நேரம் தூங்கிவிடுவீர்கள்.

கருவுற்றதற்கான அறிகுறிகள் – அதிகம் வாசனையை உணருவீர்கள்:-

pregnancy symptoms tamil – வழக்கத்திற்கு மாறாக சில வாசனைகள் உங்களுக்கு பிடிக்கும். சில வாசனை குமட்டல்களை உண்டாக்கும்.

உணவு சமைக்கும்போது வாசனையை விரும்ப மாட்டீர்கள். ஆனால், மண் வாசனை போன்ற மென்மையான வாசனைகளை அதிகம் விரும்புவீர்கள்.

கருவுற்றதற்கான அறிகுறிகள் – மூச்சி திணறல்:-

pregnancy symptoms tamil – மாடிப்படி ஏறும் போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படும். இது கற்பத்திற்க்கான அறிகுறி என்று சொல்லலாம். கருவில் வளரும் குழந்தைக்கு ஆக்சிஜன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம்.

ஏன் இந்த நிலைமையானது கர்ப்ப காலம் முழுவதும் தொடரலாம். ஏனெனில் வளர்ந்து வரும் குழந்தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது.

கருவுற்றதற்கான அறிகுறிகள் – அடிக்கடி சிறுநீர் கழித்தல்:-

pregnancy symptoms tamil – நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இரவிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இதற்குக் காரணம், உங்கள் உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்ற ஓய்வின்றி சிறுநீர் பை வேலை செய்கிறது என்று அர்த்தம்.

கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2

கருவுற்றதற்கான அறிகுறிகள் – பின் முதுகு வலி:

pregnancy symptoms tamil – கர்ப்பமாக இருப்பவர்களுக்கு முதுகு வலி ஏற்படும், முதுகு வலி இல்லாத போது பின் முதுகு லேசாக தளர்வாக காணப்பட்டால், அது தசை நார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படுகிறது.

இந்த பின் முதுகு வலியானது கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்ப்பத்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இந்த பின் முதுகு வலி ஏற்படுகிறது.

கருவுற்றதற்கான அறிகுறிகள் – இரத்த போக்கு:-

pregnancy symptoms tamil – சில பெண்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் மிகக் குறைவான இரத்தப் போக்கு ஏற்படும். இதை மாதவிடாய் எனக் கருதிவிட கூடாது. அந்த இரத்தப் போக்கு நிலைத்து நிற்காமல் நின்றுவிடும்.

அதுவும் உங்களின் மாதவிடாயின் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் குறைவான இரத்த போக்கு ஏற்படும். அப்படி இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil