பிண்ணாக்கு கீரை பயன்கள்
இன்றைய பதிவில் பிண்ணாக்கு கீரையின் நன்மைகள் பற்றித்தான் பார்க்க போகிறோம். நம் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கக்கூடிய பலவகையான கீரைகள் நமது நாட்டில் விளைகின்றது. கீரைகள் என்றால் நினைவுக்கு வருவது முளைக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவைதான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனால், அதிகம் மக்களுக்கு தெரியாத, மக்கள் பயன்படுத்தப்படாத ஒரு வகையான கீரை தான் இந்த “பிண்ணாக்கு கீரை” இந்த பிண்ணாக்கு கீரை (pinnakku keerai) நம் வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் அதிகம்காணப்படும். இந்த பிண்ணாக்கு கீரையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மூக்கிரட்டை கீரை மூலம் பல நோய்களை குணப்படுத்திவிடலாம். இந்த வகையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க…
புற்றுநோய் :
பிண்ணாக்கு கீரை சித்த மருத்துவ மூலிகை செடியாகும். இந்த கீரையில் அதிக சக்தி வாய்ந்த வேதிப்பொருள்கள் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து உணவில் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் பிரச்சனையை குறைகிறது. இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் பிரச்சனையை முற்றிலும் வராமல் தடுக்கிறது.
ஒவ்வாமை:
சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை மற்றும் தேள், பூரான் மற்றும் தேனீ போன்ற விஷக்கடியினால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையை பிண்ணாக்கு கீரையை பக்குவமாக உள்ளுக்குள் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையை பரவாமல் தடுக்க உதவுகிறது.
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் | Mookirattai Keerai Maruthuvam Tamil..!
செரிமான பிரச்சனை :

தினந்தோறும் மலம் கழிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இருப்பினும் சிலருக்கு காலையில் மலம் கழிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனை சரியாக பிண்ணாக்கு கீரையை தினமும் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை மற்றும் குடல் பிரச்சனையை சரியாக்கிவிடும்.
மதுப்பழக்கம் :
அதிக மது போதை மற்றும் தவறான உணவு பொருள்கள் சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் சுணக்கம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள். பிண்ணாக்கு கீரையை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
மூலம் :
இன்றைய காலத்தில் அதிகம் பாதிக்கும் நோயாக மூல நோய் இருக்கிறது. பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதன் மூலம் மூலத்தினால் ஏற்படும் புண்களை ஆற்றவும் உதவுகிறது. இதனுடன் மலசிக்கல் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சிறுநீரக பிரச்சனை :

ஒருவரின் உடலுக்கு இதயத்தின் நலம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் சிறுநீரகத்தின் நலனும் முக்கியம். எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க புண்ணாக்கு கீரை மற்றும் அதன் தண்டுகளையும் நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் அளவுக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி வாரம் இரண்டு முறை பருகிவர, சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது, சிறுநீரக தொற்றுநோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
நோய் எதிர்ப்பு :
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிண்ணாக்கு கீரையை தினமும் சாப்பிடுவதன் மூலம் இதன் ஊட்டச்சத்து ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலில் நோய்களை உண்டாக்கும் ஆபத்தான நுண்ணுயிர்களை எதிர்த்து போராடவும் தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |














