புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ?

purattasi month

புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ?

பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் பொதுவாக பலர் புரட்டாசி மாதம்(purattasi month) அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் புரட்டாசி மாதம் உண்மையாக அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

newபுரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் (ம) வழிபாடும் முறை..!

 

சரி வாங்க உண்மையான காரணம் எதுவென்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக புரட்டாசி மாதத்தில் கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அசைவ கடைகளில் அந்த ஒரு மாதம் முழுவது ஈ ஒட்டி கொண்டு இருப்பார்கள். காரணம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் அந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமலும், சுத்தமாக இருப்பார்கள் மற்றும் விரதம் மேற்கொள்வார்கள்.

purattasi month

புரட்டாசி மாதம்(purattasi month) அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம்:

புரட்டாசி மாதம்(purattasi month) மட்டும், காலையில் வெயிலின் சூட்டுக்கு உருகி விடுவோம். மாலை மழைக்கும் குளிருக்கும் உறைந்து விடுவோம்.

அப்படி வெயிலும் வெளுத்து வாங்கும். மழையும் சளைத்தது அல்ல என்று போட்டி போடும். இடையில் திண்டாடுவது ஜீவராசிகள் நாம் தான்.

இந்த புரட்டாசி மாதத்தில் தட்பவெப்ப நிலை அவ்வாறுதான் இருக்கும். எனவே அந்த மாதத்தில் நோய்கள் கூட நம்மை எளிதாக தாக்கும்.

மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தான். மேலும் சூரியனின் தன்மை சற்று மங்கியே இருக்கும். இது போன்ற காலத்தில் அசைவம் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்று ஆகியவை ஏற்படும்.

நம் முன்னோர்களின் அறிவு:

எதை எப்படி சொன்னால் நமக்கு உரைக்கும் என்பது நம் முன்னோர்களுக்கு தெரியும்.

அறிவியல் என்று சொன்னால் யாரும் செவி வரைக்கும் கூட எடுத்து கொள்ள மாட்டோம்.

அய்யோ சாமி கண்ண குத்தும்னு சொன்னால்தான் பலரும் ஏற்பர். இன்றுவரை அனைவரும் அப்படி தான் உள்ளார்கள், பெருமாள் என்ற பெயரில் அதை கடைபிடித்து கொண்டு.

துளசி தீர்த்தம் குடிப்பதன் காரணம்:

tulsi

துளசி தீர்த்தம் குடிப்பதற்கு காரணம், நோய் பரவி எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்நேரத்தில் இந்த தீர்த்தத்தை குடித்தால் நோய் தொற்று வராமல் நம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.

இவையேதான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் ஆகும்.

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
SHARE