ஓமத்தை இதனுடன் சேர்ந்து சாப்பிட்டால் 1 மாதத்தில் 5-10 கிலோ எடையை குறைத்திடலாம்..!

Quick Weight Loss Tips Tamil

Quick Weight Loss Tips Tamil

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் நீங்கள் உடல் எடை குறைக்க பலவிதமான டிப்ஸினை பாலோ பண்றிங்களா.. அப்படி பாலோ செய்தும் நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லையா? இதன் காரணமாக ரொம்ப கவலைப்படுறீங்களா? அப்படி என்றால் இணையோட அந்த கவலையை விட்ருங்க.. ஆமாங்க பிரண்ட்ஸ் உங்கள் உடல் எடையை குறைக்க ஓமத்தை பயன்படுத்தி ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த டிப்ஸை தொடர்ந்து ஒரு மாதம் மட்டும் பாலோ செய்தலே போதும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடையை மிக எளிதாக குறைத்துவிடலாம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.

அதிகப்படியான உடல் எடை மற்றும் தொப்பை குறைய டிப்ஸ்:

பொதுவாக ஓமம் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. இந்த ஓமத்தை வைத்து ஒரு அருமையான பானம் தயார் செய்து ஒரு மாதம் மட்டும் அருந்தி வந்தாலே போதும் மிக மிக எளிதாக உடல் எடையை குறைத்துவிடலாம். அந்த பானம் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. ஓமம் – ஒரு ஸ்பூன்
  2. தேன் – ஒரு ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
  4. தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் ஓமம் செய்து அரைடம்ளர் அளவு வரும் வரை நன்கு காய்ச்சிக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிய பயன்படுத்தி வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் மிதமான சூடு வரும் வரை ஆறவிட்டு, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அருந்தும் முறை:

காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் அருந்த வேண்டும். பிறகு ஒருமணி நேரம் கழித்து உங்களது அன்றாட உணவை சாப்பிடலாம்.

பயன்கள்:

தேன் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

புதிய கொழுப்புகளை நம் உடலில் தேங்காமல் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

குறிப்பாக நாம் சாப்பிட்ட உணவுகளை மிக எளிதில் ஜீர்ணகிக்க உதவிபுரிகிறது. அதே போல் ஓமம் புற்று நோய்களை எதிர்த்து போராடும் சக்தியையும் கொண்டது.

இந்த பானம் இரத்த அழுத்தத்தையும், இதயத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. ஆரோக்கியமான முறையில் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இந்த பானத்தை ஒரு மாதம் மட்டும் ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

குறிப்பு:

இந்த டிப்ஸை பாலோ செய்யும் போது துரித உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கூடவே சிறிது நேரம் நடை பயிற்சி, யோகாசனம் இதையெல்லாம் மேற்கொள்ளுங்கள் ஒரே மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை உடல் எடையை மிகள் எளிதாக குறைத்துவிடலாம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றால் இந்த பானத்தில் தேன் சேர்ப்பதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள். வேண்டும் என்றால் சுவைக்காக இந்துப்பு சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil