கேழ்வரகு பயன்கள் | Ragi Benefits in Tamil

Ragi Benefits in Tamil

ராகி நன்மைகள் | Kelvaragu Benefits in Tamil

ஆண்டுக்கு ஒருமுறை விளையக்கூடிய தானிய பயிர்தான் இந்த கேழ்வரகு. பெரும்பாலான மக்களுக்கு முக்கிய உணவாக இருப்பது கோதுமை மற்றும் அரிசி உணவுகள் தான். சிறுதானிய வகையை சேர்ந்தது தான் இந்த கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 320 கிலோ கலோரிகள் உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 11.18 கிராம் நார்ச்சத்து, 66.82 கிராம் கார்போஹைட்ரேட், 1.92 கிராம் கொழுப்பு, மற்றும் 7.16 கிராம் புரதம் உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் கால்சியம் 364 மில்லி கிராம், இரும்பு 4.62 மில்லி கிராம், மெக்னீசியம் 146 மில்லி கிராம், பாஸ்பரஸ் 210 மில்லி கிராம், பொட்டாசியம் 443 மில்லி கிராம், மாங்கனீசு 3.19 மில்லி கிராம், மற்றும் துத்தநாகம் 2.53 மில்லி கிராம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் அடங்கிய கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

உடல் சுறுசுறுப்பாக இருக்க:

 கேழ்வரகு பயன்கள்

புரதச்சத்து என்பது கேழ்வரகில் அதிகமாக நிறைந்துள்ளது. நாம் உண்ணுகின்ற உணவில் இருக்கக்கூடிய புரதச்சத்தானது உடலை சீராக இயக்குவதற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு புரதச்சத்தானது உதவியாக இருக்கிறது. தினமும் காலை உணவாக கேழ்வரகில் செய்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நம்முடைய உடலானது உற்சாகம் நிறைந்து காணப்படும்.

செரிமான கோளாறுகள் நீங்க:

 ragi benefits in tamil

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகமாக நார்ச்சத்து இருந்தால் தான் சாப்பிடும் உணவானது உடனே செரிமானம் ஆகும். அசைவ உணவுகள், வறுவல் செய்த உணவுகளில் அதிகளவு நார்ச்சத்து இல்லாததால் அந்த உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது உடலில் ஜீரணம் ஆகுவதற்கு சிறிது நேரம் ஆகிறது. உடலில் செரிமான கோளாறுகள் இல்லாமல் இருக்க நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவினை எடுத்துக்கொள்வது நல்லது.

சிறந்த ஊட்ட உணவு:

 ராகி நன்மைகள்

தானிய பயிரான கேழ்வரகில் புரதசத்து, நார்ச்சத்து, மக்னீசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய உடலானது எப்போதும் சோர்வு அடையாமல் உற்சாகத்துடன் இருக்க வைக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த ஊட்ட உணவாக செயல்படுகிறது.

முந்திரி பருப்பு நன்மைகள்

பற்கள் உறுதி பெற:

 kelvaragu benefits in tamil

கால்சியம் சத்தானது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். உடலிலுள்ள பற்கள் மற்றும் பற்களின் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் சத்துதான் உதவி புரிகிறது. கால்சியம் சத்து கேழ்வரகில் அதிகமாக நிறைந்துள்ளது. பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்க நினைப்பவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது கேழ்வரகு உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

உடல் எடை குறைய:

 கேழ்வரகு பயன்கள்

உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்ந்து உடலின் எடையை அதிகரிக்க வைக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். உடல் எடை குறைய வேண்டுமானால் கேழ்வரகு உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்