பச்சை முட்டை குடிப்பது நல்லதா.! கெட்டதா.!

Advertisement

பச்சை முட்டை குடிக்கலாமா.!

முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தினமும் முட்டையை சாப்பிட்டுவோம். அதை முட்டையை அவித்து சாப்பிடுவார்கள், பொறித்து சாப்பிடுவார்கள், வறுத்து சாப்பிடுவார்கள் இன்னும் சில நபர்கள் பச்சையாக குடிப்பார்கள். அதிலும் பூப்படைந்த பெண்கள் பச்சையாக முட்டை குடித்தால் நல்லது என்று நம் முன்னோர்கள் 16 நாட்கள் குடிக்க சொல்வார்கள், உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பார்கள். இப்படி பச்சை முட்டை குடிப்பது நல்லதா.! கெட்டதா.! என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

முட்டையில் உள்ள சத்துக்கள்:

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் இருக்கிறது.

முட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு..?

பச்சை முட்டை குடிப்பது நல்லதா.! கெட்டதா.!

பச்சை முட்டை குடிக்கலாமா

நம் முன்னோர்கள் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக குடிப்பது நல்லது என்று இன்று வரையும் நம்பப்படுகிறது. இதனால் தான் பூப்படைந்த பெண்கள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றவர்கள் காலையில் தினமும்  பச்சை முட்டையை குடித்து வந்தார்கள்.

சமைத்த முட்டையை விட  பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் இருக்கிறது,. ஆனால் சமைத்த முட்டையை உட்கொள்ளும் போது  புரோட்டீன் 90% உடலுக்கு சேரும். அதுவே பச்சை முட்டையை உட்கொள்ளும் போது 50% மட்டும் தான் உடலுக்கு சேரும் என்று ஆய்வின் முடிவில் கூறியுள்ளார்கள்.

 முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்ட்ரியா கிருமி இருக்கிறது. இவை சமைத்து சாப்பிடும் போது அழிந்து விடும். அதுவே நீங்கள் பச்சையாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி, டைபாய்டு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும்.  

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் பச்சை முட்டையை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு முட்டை மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்..

முட்டையை 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடும் போழுது சால்மோனெல்லா பாக்ட்ரியா அழிந்து விடும். சமைத்த முட்டையை சாப்பிட்டாலும், பச்சை முட்டையை குடித்தாலும் சத்துக்கள் ஒன்று தான். ஆனால் பச்சை முட்டையை குடிக்கும் பொழுது மேல் கூறப்பட்டுள்ள உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

Advertisement