வாயு தொல்லை வர காரணம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் வாயு தொல்லை எதனால் ஏற்படுகிறது, இதனை சரி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே இது சிலருக்கு அதிகமாகவே இருக்க கூடிய பிரச்சனைகள் தான். நாம் சாப்பிடும் சில உணவுகள் ஜீரணமாவது மிகவும் கடினமாக இருக்கும். சில ருசியான உணவுகளினாலும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாகின்றன. மேலும் வாயு தொல்லை ஏற்படுவதற்கான காரணம் என்ன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வயிற்று வலி குணமாக வீட்டு வைத்தியம் |
சாப்பிடுவதில் கவனம்:
நாம் உணவுகளை சாப்பிடும் பொழுது அதிகம் கவனம் தேவை சிலர் சாப்பிடும் பொழுது டிவி அல்லது மொபைல் போன்களை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதால், என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் அதிகமாக சாப்பிடுவார்கள். பொதுவாக வேகமாக சாப்பிட கூடாது, சாப்பிடுவதில் பொறுமை அவசியம். இது போன்ற காரணங்களினால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பொட்டாசியம் நிறைந்த உணவு:
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், தேங்காய், வெள்ளரி, தர்பூசணி, இனிப்பு உருளை கிழங்கு, தண்ணீர் மற்றும் கீரை போன்ற உணவுகளை சாப்பிடுவதால் சீக்கிரமாக செரிமானம் ஆவதற்கும் வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கும்.
தண்ணீர் குடிப்பது அவசியம்:
சாப்பிட பிறகு சிலருக்கு வயிறு வீக்கம் உள்ளது போல் இருக்கும். இதற்கு காரணம் சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
சாப்பிட்டவுடன் சுறுசுறுப்பு:
சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவதை தவிர்ப்பது நல்லது, சாப்பிட உடன் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். சாப்பிட பிறகு நடப்பதால் வயிற்றில் உள்ள அழுத்தத்தை அகற்றவும், சீக்கிரமாக செரிமாணமாவதற்கும் உதவியாக இருக்கும்.
சூடான தேநீர்:
சிலர் மூச்சி முட்டும் அளவிற்கு சாப்பிட்டு விட்டு வாயு தொல்லையால் மிகவும் அவதிப்படுவார்கள். இப்படி அதிகமாக சாப்பிடுவதினால் குடலில் எரிச்சலை ஏற்படுத்தி, செரிமான மண்டலத்தில் வாயு பிரச்சனைகளை உண்டாகிறது. மேலும் இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு சூடான தேநீரை குடிப்பதால் குடலை தனித்து, அசௌகரியத்தை ஏற்படுத்த கூடிய வாயு பிரச்சனையில் இருந்து விடுபடச் செய்கிறது.
தேநீரை அருந்தும் பொழுது சர்க்கரையை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் சர்க்கரையானது உயிர் அணுக்களில் தண்ணீரை தக்கவைக செய்க்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |