Reason For Hip Pain in Tamil
இடுப்பு வலி என்பது அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனை. இடுப்பு வலி வந்தால் எழுந்து நிற்கவோ உட்காரவோ ரொம்ப கஷ்டப்படுகிறோம். இக்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இடுப்பு வலியால் அவதிப்படுகிறார்கள். இவ்வலியிருந்து விடுபட நாம் மாத்திரை, தைலம் போன்ற பலவற்றை பயன்படுத்தி இருப்போம். எனவே இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது..? இடுப்பு வலியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்..? என்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..!
இடுப்பு வலி எதனால் வருகிறது..?
ஒருவர் செய்யும் அதிகப்படியான வேலையின் காரணத்தினால் மூட்டுகளின் குருத்தெலும்பு பாதிப்படைகிறது. இது இடுப்பு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் வயது அதிகரிப்பதன் காரணமாகவும் இடுப்பு வலி ஏற்படுகிறது.இடுப்பு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன:
சிலபேர், உட்காரும் போதும் எழும்போதும் இடுப்பை பிடித்து கொண்டே எழுவார்கள். இதற்கு காரணம் இடுப்பு மூட்டுகளில் வலி அல்லது இடுப்பை சுற்றியுள்ள அமைப்புகளில் வலி ஏற்படுவதே ஆகும்.
இடுப்பு வலி வருவதற்கு முக்கிய காரணம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் தொலை தூரம் நடப்பதாலும் ஏற்படுகிறது.
நாம் நீண்ட நேரம் உட்காரும் போதும், அதிக வேலை செய்யும் போதும் இடுப்பிற்கு அதிக அழுத்தம் உண்டாகிறது. இதனால் இடுப்பு வலி ஏற்பட்டு உட்காரவோ எழவோ ரொம்ப கஷ்டப்படுவார்கள்.
இடுப்பு மூட்டுகள் சேதமடைவதால் இப்பிரச்சனை தோன்றுகிறது. அதாவது, காலின் பெரிய எலும்புகள் இடுப்பு மூட்டுடன் இணையாமல் இருப்பதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ இடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5 டிப்ஸ் மட்டும் போதும்..!
இடுப்பு வலி வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்..?
இடுப்பு வலி வராமல் இருக்க தினமும் பயிற்சிகள் செய்ய வேண்டும். அதாவது, ஓடுவது, நடப்பது மற்றும் நீந்துவது போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.
வயிற்று தசைகளையும் முதுகுப்புற தசைகளையும் வலுவாக வைத்திருப்பதன் மூலமாகவும் இடுப்பு வலி வரமால் தடுக்கலாம்.
மேலும், முதுகை பின்புறமாக வளைத்து உடற்பயிற்சி செய்வது நல்லது. அதுமட்டுமில்லாமல் உடல் எடையை சரியான அளவில் வைத்து இருப்பதாலும் இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ முதுகு வலி, இடுப்பு வலியை இப்படி கூட குணப்படுத்த முடியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |