சிவப்பு அவலின் மருத்துவ நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement

சிவப்பு அவலின் மருத்துவ நன்மைகள் | Benefits of Red Rice Flakes In Tamil

வணக்கம் மக்களே..! நாம் அனைவரும் அவலை தின்பண்டங்களாக சாப்பிட்டிருப்போம் நம் முன்னோர்கள் அவலை வெவ்வேறு உணவாக சமைத்து சாப்ட்டிருக்கிறார்கள். அவல் என்பது வெள்ளை அவல் சிவப்பு அவல் என்று இரண்டு இருக்கிறது. இதில் சிவப்பு அவல் தான் உடம்புக்கு நல்லது என்றும் நிறைய விடமின்ஸ் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்த பதிவில் சிவப்பு அவலின் நன்மைகள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

சிவப்பு அவலில் Iron, Calcium, Magnesium, Phosphorous, Manganese, Zinc போன்ற தாது சத்துக்கள் இருக்கிறது.வைட்டமின் A, B, C மற்றும் நார்ச்சத்தும் இருக்கிறது. இந்த சத்துள்ள சிவப்பு அவலை சாப்பிடும் பொழுது நமக்கு 7 சிறந்த நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

அவல் பயன்கள் | Aval Benefits in Tamil

சிவப்பு அவலின் 7 மருத்துவ நன்மைகள்:

செரிமான ஆரோக்கியத்தை மேம்படும்:

நாம் சிவப்பு அவலை சாப்பிடும் பொழுது நமக்கு செரிமான சார்ந்த பிரச்சனைகள் வயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்றவை நீங்கும். சிவப்பு அவலை காலையில் உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள செரிமான கோளாறை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

அனீமியாவை குணமாகும்:

ரத்தத்தின் இரும்பு சத்து குறைவாக இருப்பதால் தான் அனீமியா போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிவப்பு அவலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இது புதிய ரத்த அணுக்களை உருவாகும் மற்றும் ரத்த அணுக்களின் எணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் அனீமியா பிரச்சனை இருப்பவர்கள் இந்த உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

கேட்ட கொழுப்பை குறைக்கும்:

சிவப்பு அவலில் அதிக நார்சத்து இருப்பதால் இது உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும் மேலும் உடல் எடையை குறைக்கும். சிவப்பு அவல் ரத்த குழாயில் அடைப்பு வராமல் காக்கும். சிவப்பு அவல் நம் உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்:

சிவப்பு அவல் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றால் இதில் உள்ள ஆன்தோசயனின்(Anthocyanin) தான் காரணம்.இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்(Antioxidant) என்பதால் இது உடலில் உள்ள செல் கழிவுகளை வெளியேற்றி செல்கள் சேதமைடைவதை தடுக்கும். இது கான்செர் செல்களை அளிப்பதோடு இது பிரேஸ்ட் கான்செர் மற்றும் லுங்ஸ் கான்செர்(Breast Cancer and Lung Cancer) வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:

வெள்ளை அரிசியை விட சிவப்பு அவல் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.அரிசியில் உள்ள அனைத்து சத்தும் இதிலும் இருக்கிறது. சிவப்பு அவலில் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய Dietary Fiber மற்றும் B Complex Vitamins இருப்பதால் இது சர்க்கரை அளவு ஏறாமலும் சர்க்கரை அளவு சீராகவும் இருக்க மேம்படுத்தும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

நம் உடலில் இதய துடிப்பு சீராக இருக்கவும் ரத்த அழுத்தம் ஆரோக்கியமாக இருக்கவும் Magnesium மற்றும் Potassium சத்து மிகவும் தேவைப்படுகிறது. சிவப்பு அவலில் இந்த இரண்டு சத்துக்களும் அதிகமாக இருக்கிறது என்பதால் உயர் ரத்த அழுத்தம்(Hyper Tension) பிரச்சனையில் அவதிபடுபவர்கள்.  காலை உணவாக சிவப்பு அவலை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு நல்லது:

சிவப்பு அவலில் குலந்திகளின் வளர்ச்சிக்கு தேவையான Protein, Carbohydrate, Fats, Vitamins மற்றும் Minerals போன்ற அடிப்படை சத்துகள் நிறைந்திருக்கிறது. இது உடல் பலத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. மேலும் குழந்தைகளின் மூல வளர்ச்சிக்கும் மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான B வைட்டமின்ஸ் இந்த சிவப்பு அவலில் நிறைந்திருக்கிறது. இது குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

 

சாமை அரிசி தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement