ரேஷன் அரிசி பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ரேஷன் அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை அதிகம் விரும்புவதே இல்லை. காரணம் என்ன தெரியுமா கௌரவம் பார்க்கிறார்கள். இதனால் கடைகளில் உள்ள அரிசியை வாங்கி சாப்பிடுக்கிறார்கள், கடைகளில் விற்கும் அரிசி வெள்ளையாகவும் தூய்மையாகவும் இருப்பதால் இதை அதிகம் சாப்பிட விரும்பிக்கிறார்கள்.
ரேஷனில் கிடைக்க கூடிய அரிசி எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? நெல்லை ஊறவைத்து, நெல்லை அவியல் செய்து, அதனை உலரவைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் மற்ற அரிசிகளை விட நிறம் குறைந்து காணப்படுகிறது. எனவே ரேஷனில் கிடைக்க கூடிய அரிசிகளை தினமும் சாப்பிடுவதால் பல ஆரோக்கியங்களை தருகிறது. மேலும் ரேஷன் அரிசியை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய பல நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! |
ரேஷன் அரிசி நன்மைகள் | resan arisi benefits in tamil:
ரேஷனில் கிடைக்க கூடிய புழுங்கல் அரிசியை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல மாற்றங்களையும் நன்மைகளையும் தருகிறது. அதோடு ரேஷன் அரிசியில் தக்காளி சாதம், பிரியாணி போன்ற உணவுகளை சமைக்கும் பொழுது தரமாகவும், சுவையாகவும் இருக்கும். ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி இருக்காது. கொஞ்சமாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்ட ஒரு திருப்தியாக இருக்கும்.
செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் தினமும் ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுவதால் செரிமானம் சரியான நேரங்களில் நடக்கும். ஆனால் இவை கடை அரிசியில் அந்த திருப்தி கிடைப்பது இல்லை.
உடல் மெலிந்து உள்ளவர்கள் தினமும் ரேஷன் அரிசி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கவும் செய்க்கிறது. அதோடு உடல் வலிமை பெறுகிறது.
ரேஷன் அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் நீரிழிவு நோய் மற்றும், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு பல நன்மைகளை தருகிறது.
ரேஷன் அரிசியை சாப்பிடும் பொழுது சிலர் அதை அருவருப்புடன் சாப்பிடுக்கிறார்கள், நீரிழிவு நோய் மருத்துவர்கள் நீரிழிவு நோய் குணமாவதற்கு ரேஷன் அரிசியை பரிந்துரைக்கிறார்கள்.
ரேஷன் அரிசி சுத்தம் செய்வது எப்படி:
சிலர் சாப்பிடும் ரேஷன் அரிசியில் வாசனைகள் வருகிறது, அதற்கு சமைப்பதற்கு முன்பு தண்ணீரை கொத்திக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரிசியை களைந்தால் வாசனை போகிவிட்டும். பிறகு அதனை சமைத்து சாப்பிடுவது நல்லது.
ரேஷன் அரிசியை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் இட்லி, தோசை, இடியப்பம்,உப்புமா, ஆப்பம் செய்து சாப்பிட்டு வரலாம்.
அதோடு அதில் காரம், இனிப்பு, முறுக்கு போன்ற பலகாரம் வகைகளை செய்து சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |