Rice Water Side Effects In Tamil
இளைஞர்கள் தங்கள் முகம் பொலிவடைய சில கிரீம்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நபர்கள் வீட்டிலேயே இயற்கையாக தங்களுக்கு தேவையான face pack செய்து முகத்துக்கு பயன்படுத்துகிறார்கள். தோசை மாவு, கடலை மாவு, முல்தானிமட்டி போன்ற பவுடர்களையும் பயன்படுத்துகின்றனர். மேலும் முகம் பொலிவடைய அரிசி ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அரிசி தண்ணீர் பயன்படுத்தலாமா கூடாதா என்பதையும். அரிசி தண்ணீர் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகளையும் இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
அரிசி ஊறவைத்த தண்ணீர் எதற்காக பயன்படுத்தப்படுகிறது:
பெண்கள் தங்கள் முகம் பொலிவடைய அரிசி ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்திகின்றனர். அரிசி ஊறவைத்த தண்ணீர் அல்லது வடித்த தண்ணீர் இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது. அரிசி ஊறவைத்த தண்ணீர் வயதான தோற்றத்தை சரி செய்ய செய்ய உதவுகிறது. மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அரிசி நீர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்றாலும் சமயங்களில் அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
அரிசி ஊறவைத்த தண்ணீரை சருமத்தில் பயன்படுத்தலாமா?
- அரிசி தண்ணீரில் அதிக அளவு மாவுச்சத்து இருப்பதால் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது சரும ஆரோக்கியம் மேம்படுகிறது.
- பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு இதில் உள்ள என்சைம்கள் உதவுகின்றன.
- இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் சருமத்தை பிரகாசமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பாதிப்புகளை சரி செய்வதற்கு இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உதவுகின்றன.
- முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கவும் சரும பராமரிப்பிலும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.
- சருமத்துக்கு இயற்கையான ஈரப்பதமூட்டியாக அரிசி தண்ணீர் செயல்படுகிறது.
அரிசி ஊறவைத்த தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள்:
சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது:
அரிசி தண்ணீர் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் ஊட்டியாக செயல்படுகிறது. ஆனால் இதனை அடிக்கடி பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி ஏற்பட காரணமாகிறது. இதை அடிக்கடி பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி வறட்சி மற்றும் செதில் உரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. வாரத்துக்கு இருமுறை மட்டும் இவற்றை பய்னபடுத்துவது சருமத்துக்கு ஆரோக்கியமானது.
ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது:
அதிக உணர்திறன் மிக்க சருமத்தை கொண்டவர்களுக்கு இதனை பயன்படுத்திய பிறகு ஒவ்வாமைகள் ஏதாவது ஏற்படலாம். குறிப்பாக அடிக்கடி சருமத்தில் ஒவ்வாமைகள் பாதிப்புகளை சந்திப்பவர்கள் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு சரும நிபுணர்களை ஆலோசனை செய்வது நல்லது. இதனை பயன்படுத்தும் போது உங்களுக்கு சருமத்தில் எரிச்சல் அல்லது சிவத்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால் இதனை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
முகப்பரு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது:
அதிகமாக புளிக்க வைக்கப்பட்ட அரிசி தண்ணீரை பயன்படுத்துவது முகப்பரு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. புளித்த அரிசி தண்ணீரை சருமத்தில் பயன்படுத்தும் போது அது சரும துளைகளை அடைக்கிறது. சரும துளைகள் அடையும் போது அங்கு முகப்பருக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முகப்பரு ஏற்படாமல் இருக்க அரிசி நீரை நன்கு கரைத்து பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பிறகு அதனை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
சரும நிறத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறது:
தொடர்ந்து பழைய அரிசி தண்ணீரை பயன்படுத்தும்போது அது சரும நிறத்தை மாற்றுகிறது. எனவே புதிய அரிசி தண்ணீரை சருமத்தில் பயன்படுத்துவது நல்லது. மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தாமல் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் பயன்படுத்துவது சருமத்துக்கு ஆரோக்கியத்தை தரும்.
மேலும் அரிசி தண்ணீரை நேரடியாக பயன்படுத்திவிட்டு வெயிலில் வெளிப்படுவது சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே இயற்கையான அழகு பொருள்கள் பயன்படுத்துவது நன்மையே என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக பயனப்டுடுவது நல்லதல்ல.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |