சப்ஜா விதை நன்மைகள்..! Sabja Seeds Benefits In Tamil..!
வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் யாரும் அறிந்திடாத சப்ஜா விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகளை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். சப்ஜா விதைகள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் எள் போன்று இருக்கும். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த திருநீற்று பச்சை மூலிகை செடியின் விதைத்தான் இந்த சப்ஜா விதை என்று கூறுகிறார்கள். அதே போன்று சியா விதைகளும் சப்ஜா விதைகளும் ஒன்று தான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். சப்ஜா விதை கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். சியா விதையானது கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கக்கூடிய ஒன்று. சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டுமே வெவ்வேறு தான். ஆனால் இரண்டு விதைகளுமே பல மருத்துவ குணங்களை கொண்டது. சரி வாங்க நண்பர்களே இப்போது இந்த சப்ஜா விதையினை எப்படி பயன்படுத்த வேண்டும், யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும், சப்ஜா விதை சாப்பிடுவதால் எந்தெந்த நோய்கள் குணமாகும் என்று இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்? |
சப்ஜா விதையை பயன்படுத்தும் முறை – sabja seeds in tamil:
சப்ஜா விதையினை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அல்லது வெதுவெதுப்பான நீர் என்றால் சிறிது நேரம் வரை ஊற வைத்தால் போதுமானது.
சப்ஜா விதையினை இரவில் ஊறவைத்து விட்டு மறு நாள் கூட பயன்படுத்தலாம். ஊறிய பின்பு பார்த்தால் ஜவ்வரிசி போன்றே இருக்கும். ஊற வைத்த சப்ஜா விதையினை ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், பால், தண்ணீர் இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து குடித்து வரலாம்.
சப்ஜா விதையானது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று.
சப்ஜா விதையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3 fatty acids, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதை:
சப்ஜா விதையினை கோடை காலங்களில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது இந்த சப்ஜா விதை. உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவில் படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது. மேலும் உஷ்ணத்தினால் ஏற்படும் கண் எரிச்சலையும் குணப்படுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும் சப்ஜா:
அதிகளவு சப்ஜா விதையில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுபவர்கள் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சப்ஜா விதை நன்மைகள் – மூலநோய் குணமாக:
மூலநோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வர மூல நோய் பிரச்னை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
உடல் எடை / தொப்பை குறைய சப்ஜா விதை:
அதிக நார்ச்சத்து உள்ள சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைந்தளவே உள்ளது. 1 ஸ்பூன் சப்ஜா விதையில் 2 முதல் 4% கலோரிகள் மட்டுமே உள்ளது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் தொப்பையும் குறையும். அதுமட்டும் இல்லாமல் சப்ஜா விதையினை உட்கொள்வதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதற்கு காரணம் சப்ஜா விதையில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த சப்ஜா விதையினை சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோயை குணப்படுத்தும் சப்ஜா:
சப்ஜா விதை டைப் 2 நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தினமும் 1 டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். மேலும் சப்ஜா விதையில் ஒமேகா 3 fatty acids இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி சப்ஜா விதைக்கு உள்ளது.
தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? |
நெஞ்செரிச்சல் / அசிடிட்டி குணமாக:
நெஞ்செரிச்சல், அசிடிட்டியால் மிகவும் அவதிப்படுபவர்கள் இரவில் ஊறவைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் ஜீரண பாதையில் உள்ள புண்களை சப்ஜா விதை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. அதோடு சிறுநீர் பாதையில் உண்டாகக்கூடிய புண்கள், சிறுநீரக எரிச்சல், சிறுநீர் தொற்று, வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த சப்ஜா விதை மிகவும் உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை குணப்படுத்தும் சப்ஜா:
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சப்ஜா விதை குணப்படுத்தும்.
மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சப்ஜா:
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.
1 ஸ்பூன் சாப்பிடுங்க..! பல நோய் காணாமல் போகும்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |