சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மருந்தா..?

Advertisement

கர்ப்பிணிகள் சக்கரவள்ளி கிழங்கு சாப்பிடலாமா?

நண்பர்கள்  அனைவருக்கும் இனிய வணக்கம் பொதுவாக நாம் காய்கறிகள் கடைகளுக்கு சென்றால் முக்கியமாக வாங்கி வருவது மூன்று பொருள்தாங்க அதில் இரண்டு பொருள் சமையலுக்கு முக்கியமானது வெங்காயம் தக்காளி அதுக்கு அப்புறம் குழந்தைங்களுக்கு மிகவும் பிடித்த உருளை கிழங்கு தான். இந்த உருளை கிழங்கை அதிகம் குழந்தைகள் சாப்பிடலாம் ஆனால் அதனை பெரியவர்கள் சாப்பிடக்கூடாது அதனால் இதனை பெரியவர்கள் அதிகம் தவிர்க்கின்றன, கிழங்கு என்றால் உருளை கிழங்கு மட்டும் அல்ல நிறையவிதமான கிழங்குகளும் உள்ளது அதனை பிள்ளைகளுக்கு பிடித்ததை போல் செய்து கொடுத்தால் அவர்கள் உடலுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. அதில் ஒரு கிழங்கை பற்றி நன்மைகளை பார்ப்போம் வாங்க..!

சக்கரைவள்ளி கிழங்கு பயன்கள்:

கிழங்குகளிலே இனிப்பு சுவை உடையது இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு தான் இதில் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த கிழங்கை அதிகம் வாங்க மறுத்துவிடவார்கள் காரணம் அதனை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அதனால் அதனை சாப்பிட மறுத்துவிடார்கள்.

இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, பொட்டாசியம், நார்சத்து, பீட்டா கரோட்டின், மாவுசத்து போன்ற சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. இதற்கு பிறகு இதை யாரும் வாங்க மறக்க மாட்டிர்கள்.

உடல் எடையை குறைக்க உதவும்.  நிறைய கிழங்கு வகைகள் சாப்பிட்டால்  உடை எடை அதிகமாகும். அதனால் கிழங்கு வகைகளை சாப்பிடுவார்கள். ஆகையால் மறுக்கிறார்கள். ஆனால் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிட்டுவருவதால் உடல் எடை குறையும் என்றால் அதில் சிறிதளவு கூட கெட்ட கொழுப்புகள் கிடையாது அதனால் உடை எடை அதிகமாக வாய்ப்புகள் இருக்காது. அதேபோல் நார்சத்து அதிகம் உள்ளது அதனால் உடல் எடை அதிகம் ஆகாது.

அதேபோல் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் B6 சத்து இருப்பதால் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இந்த  நோய் வருவதால் உங்களுக்கு மாரடைப்பு வர வழிவகுக்கிறது.

வயிற்று பூண் அல்சரை குணமாக்கும். இந்த அல்சர் வர காரணம் வயிற்றில் ஆசிட் என்னும் அமிலம் சுரப்பதால் அல்சர் வரும். இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் மினரல் உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகளை அளிக்கின்றது. ஆகையால் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை உட்கொள்ளுவது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடலாம். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகமிக அவசியமான சத்துக்கள் ஆகும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் இதை அதிகம் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெரும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதை ஏன் குழந்தைங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றால் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கிழங்கில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதனை தினமும் உட்கொள்ளலாம். சிலருக்கு அடிக்கடி இருமல் சளி காய்ச்சல் வரக்கூடும் ஆகையால் இதனை உட்கொள்வதால் அதனை தடுக்க முடியும்.

முக்கியமாக இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இதை அதிகம் சாப்பிட மறுக்கிறார்கள். இதை உட்கொண்டால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் என்று நம்புகிறார்கள் இது முற்றிலும் தவறான கருத்து இது low glycemic index உணவு ஆகையால் இதனை சாப்பிடலாம் இது குறைவதால் இருக்கும் சர்க்கரை. அதுமட்டுமில்லாமல் இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரையில் ஆலவாய் சீராக வைக்கும்.

இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டுவதாவதால் நமக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது ஏனென்றால் இந்த கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறம் எப்படி வருகிறது என்றால் அதில் உள்ள  பீட்டா கரோட்டின் தான். குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இந்த கிழங்கை பற்றி தெரிந்துகொள்ள ⇒ ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement