சாலியா விதை பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

சாலியா விதை பயன்கள் | Saliya Seed Benefits in Tamil..!

ஹலோ நண்பர்களே… இன்று நம் ஆரோக்கியம் பதிவில் சாலியா விதை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது என்று தான் பார்க்கப்போகிறோம். இன்றைய நிலையில் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் இருந்த பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவுகளை இன்றைய காலகட்டத்திலும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதுபோல இன்று நாம் சாலியா விதை என்ற தானியத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம் வாங்க…

இதையும் பாருங்கள் ⇒ ஆளி விதை மருத்துவ குணங்கள்

சாலியா விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:  

சியா விதைகள் மற்றும் சப்ஜா விதை இவைகளின் பட்டியலில் சாலியா விதைகள் முதல் இடத்தை பிடித்துள்ளன”. சாலியா விதையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த சாலியா விதைகளை ஆங்கிலத்தில் Garden Cress Seeds என்று அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் நார்சத்து, புரதச்சத்து, இரும்புசத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

ரத்தசோகை நோய்:

இந்த விதையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகிறது. ரத்தசோகை நோய்  உள்ளவர்கள் இந்த விதையை வாரத்தில் ஒருமுறை சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் அளிக்கும். மேலும், ரத்தசோகை நோய் வராமல் தடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள்:

இந்த சாலியா விதையில் இரும்புசத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இந்த விதைகளை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டு வருவதால் நன்மை அளிக்கிறது. மேலும் பால் உற்பத்தி அதிகரிக்கவும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் இந்த சாலியா விதையை மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடுவது நல்லது.

மாதவிடாய் பிரச்சனை தீர்வு:

பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலியா விதை மிகவும் பயன்படுகிறது. இந்த சாலியா விதையில் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது. அதுமட்டுமின்றி சாலியா விதைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன்கள் சீரமைக்கப்பட்டு சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்பட உதவுகிறது. இது பெண்களுக்கு கிடைத்த இயற்கையான வழிமுறைகள் ஆகும்.

உடல் எடையை குறைய:

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது பசியின்மையை போக்குகிறது. இந்த விதைகளில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் தசைகளை வலிமையாக வைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த விதைகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கல் நீங்க:

சாலியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் பாதுகாப்பிற்கு உதவுகிறது. மலசிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. வாயு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement