
சால்மன் மீன் பயன்கள் | Salmon Fish Uses in Tamil
Salmon Fish in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் சால்மன் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம், அதோடு சால்மன் மீனில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது? என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் உணவில் சால்மன் மீனினை (salmon fish benefits) சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு, தோல் சம்பந்த பிரச்சனை, மூட்டு வலி, போன்றவற்றை சரி செய்யலாம். சால்மன் மீனில் அதிக வைட்டமின், தாது மற்றும் முக்கியமாக ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். சால்மன் மீன் (salmon fish benefits in tamil) அதிகமான எண்ணெய் பசை உடையது. அதனால் சால்மன் மீனினை அடுப்பில் சுட்டோ, கிரில் அல்லது அதிக அழுத்தத்தில் நீராவியில் வேகவைத்து அல்லது கொதிநீரில் கொதிக்க வைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். சரி இப்போது சால்மன் மீனில் (salmon fish in tamil) என்னென்ன வகையான சத்துக்கள் உள்ளன, எந்த விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று விரிவாக படித்தறியலாம்..!
சால்மன் மீன் பயன்கள் – Salmon Fish Benefits in Tamil
ஒமேகா 3 நிறைந்துள்ள சால்மன் மீன்:
salmon in tamil: சால்மன் மீன் நன்மைகள் – ஒமேகா 3 (salmon omega 3 benefits) என்பது கொழுப்பு அமிலத்தினை சேர்ந்ததாகும். ஒமேகா கொழுப்பு அமிலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமில சால்மன் மீனை சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி, தோல் சம்பந்த பிரச்சனைகள், இதய நோய் போன்றவை வருவதை தடுக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்தம், அதிகமான கொழுப்புகள், மன அழுத்தம் பிரச்சனை, மூளை சம்பந்த நோய்கள் மற்றும் புற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க:
ஒமேகா 3 என்ற கொழுப்பானது நம் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற அமிலமாகும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே அந்த ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது கிடைக்கும். சால்மன் மீனில் எண்ணெய் பதம் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே அதில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது இருக்கும்.
- சால்மன் மீன் சாப்பிட்டு வருபவர்களுக்கு தீராத நாள்பட்ட நீரிழிவு நோய் மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற நோயானது குணமாகும்.
அதிக உடல் எடையை கட்டுப்படுத்தும்:
salmon fish benefits in tamil: சால்மன் மீன்களில் அதிக புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் புரதம் நிறைந்த சால்மன் மீனினை எடுத்துக்கொண்டால் உடல் மெலிந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பீர்கள்.
- மேலும் சால்மன் மீனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோடீன் மூலக்கூறுகள் உள்ளன. அவை மூட்டிலுள்ள குறுத்தெலும்புகளுக்கு, இன்சுலின் செயல்திறனுக்கு மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் போன்றவை வராமல் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.
பல நோய்களை விரட்டும் சால்மன் மீன்:
salmon fish in tamil benefits: சால்மன் மீனில் வைட்டமின் பி 1, பி 2, பி 3 மற்றும் பி 5 போன்றவை அதிகளவு உள்ளன. சால்மன் மீனானது இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் அதில் ஏற்படும் பழுதை சரி செய்வது மற்றும் இருதயத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைத்துவிடும்.
- முக்கியமாக சால்மன் மீனில் அதிகளவு வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி நிறைந்த சால்மன் மீன், எலும்பு பகுதி மற்றும் பற்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis) மற்றும் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
தாதுக்கள் நிறைந்த சால்மன் மீன்:
சால்மன் மீனில் அதிகமாக பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் செலினியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. பழ வகைகளில் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. ஆனால் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10% கூடுதலாக சால்மன் மீனில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். குறிப்பாக நம்முடைய உடலில் உபரி நீர் சேராமல் தடுக்கும்.
- பாஸ்பரஸ் என்ற தாதுவானது எலும்பு மற்றும் பற்கள் பகுதியை நல்ல வலிமையாக வைத்திருக்கும். மேலும் சிறுநீரகம், இதய நோய்கள், தைராய்டு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். தாது சத்துக்கள் குறைந்த அளவில் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் மூலம் புற்றுநோய் உண்டாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Health Tips in Tamil |