சதுரகிரி மூட்டு வலி தைலம்
மூட்டு வலிக்காக பலரும் மருத்துவர்களை நாடி தான் செல்கிறார்கள். அவர்கள் எழுதி கொடுக்கும் மாத்திரை, மருந்துகளை வாழ்நாள் முழுவதும் போட வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த மாத்திரை, மருந்துகளை பயன்படுத்தும் போது மட்டும் தான் வலிகள் நீங்கும். அதனால் இயற்கையான முறையில் சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு தைலத்தை தான் தேர்வு செய்கிறார்கள். அதிலும் பல சதுரகிரி மூட்டு வலி தைலத்தை பயன்படுத்துகிறர்கள். இதனை பணம் கொடுத்து தான் வாங்குகிறார்கள். ஆனால் இதனை வீட்டிலையே செய்தால் பணமானது மிச்சமாகும். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு சதுரகிரி மூட்டு வலி தைலம் தயாரிப்பது எப்படியென்று அறிந்து கொள்வோம் வாங்க..
சதுரகிரி மூட்டு வலி தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- வாதமுடக்கி-
- காட்டமனக்கு-
- அத்திப்பால்-
- விராலி
- சித்திர மூலம்
- திசை கருடன்
- சீந்தில் கொடி
- பேராமுட்டி
- மூக்கிரட்டை வேர்
- பொருமி
- பிரண்டை
- வேலி பருத்தி
- வாதநாராயணன்
- வெள்ளருக்கு
- முடக்கறுத்தான்
- நிலவேம்பு
- மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள்/நாட்டு மஞ்சள்)
- வேப்பிலை
- சித்தரத்தை (சுக்கு போன்றது)
- எள்ளெண்ணெய் (gingelly oil)
மூட்டு வலியை போக்கும் மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை
சதுரகிரி தைலம் செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள மூலிகைகளை நன்கு சுத்தம் காய வைத்து கொள்ள வேண்டும். இவை நன்றாக காய்ந்த பிறகு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
இரும்பு சட்டியை அடுப்பில் வைத்து அதில் எள் எண்ணெயை ஊற்றி சூடாக வைத்து கொள்ள வேண்டும். பின் இதில் பொடியாக அரைத்து வைத்துள்ள மூலிகைகளை சேர்க்க வேண்டும்.
இதனை குறைவான தீயிலே வைக்க வேண்டும். மூலிகைகளின் சாறானது எண்ணெயில் கலக்கும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். எண்ணெயில் சேர்வதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். மூலிகையின் நிறமானது எண்ணெயில் கலக்கும். அவ்வப்போது அடுப்பை அனைத்து விட வேண்டும்.
அதன் பிறகு எண்ணெயை ஆற விட வேண்டும். அறிய பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து வடிக்கட்ட வேண்டும். இதனின் சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
மேல் தயாரித்த எண்ணெயை வலி உள்ள இடத்தில் இரவு நேரத்தில் தேய்ப்பது நல்லது. இதனை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதனை தடவிய பிறகு வெந்நீரை சூடாக்கி அதில் துணியை நனைத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
சதுரகிரி மூட்டு வலி தைலத்தின் பலன்கள்:
நமது வாழ்க்கை முறை காரணமாக நமது மூட்டுகள் மற்றும் தசை செல்களை அதிகமாக பாதித்து, அவற்றை செயலிழக்கச் செய்கிறது. ஆர்த்தோஹெர்ப் எண்ணெய் சருமத்தில் எளிதில் ஊடுருவி, அதன் மருத்துவ குணங்களை உடலில் உள்ள தசை செல்கள் மற்றும் மூட்டுகளுக்கு வழங்கி, அதை நெகிழ்வானதாகவும், வலிமையானதாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.
- அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக இருக்கிறது.
- மூட்டு வலியை குறைக்க செய்கிறது.
- வீக்கத்தை குறைக்க கூடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | patti vaithiyam tamil tips |