சீம்பால் நன்மைகள் | Seempal Benefits in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு எப்படி தாய் பால் அவசியமோ அதேபோல் மாடுகளுக்கு குட்டி போட்டவுடன் அதற்கு பால் கொடுப்பது அவ்வளவு அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் பாலானது மிகவும் அவசியம். அவற்றின் வளர்ச்சிக்கு பிறகு தாய் பால் தான் ஊட்டச்சத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிதும் உதவு செய்கிறது.
சீம்பால் என்றால் என்ன:
நம் வீடுகளில் பசு மாடு உள்ளது. அது கன்றை ஈன்ற பின் அந்த கன்று சற்று சோர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது. அந்த சமையத்தில் தாய் மாடானது கொடுக்கும் பால் தான் அதற்கு சத்துக்களை கொடுக்க வேண்டும்.
மேலும் கன்றை ஈன்ற பின் தாய்மாடு 3 நாட்கள் அளிக்கும் வெண்ணிறமாக இல்லாமல் அடர்ந்த நிறமாக பால் கொடுக்கும். அந்த பாலில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும்.
அதனால் கன்றுகள் பிறந்து அதற்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் இந்த பாலை குடிப்பதன் மூலம் குட்டிகள் வேகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கும். கன்று ஈன்று 3 நாட்கள் கொடுக்கும் பாலை தான் சீம்பால் என்று சொல்வார்கள். அதன் பின் பால் வெண்ணிறமாக மாறிவிடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
சீம்பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
சீம்பாலில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் உள்ளன. ஆகவே மனிதர்கள் சீம்பாலை உட்கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவி செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
மனிதர்கள் உட்கொண்டால் நாள்பட்ட மலச்சிக்கலையும் சரியாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, உடலில் அஜீரண பிரச்சனைலிருந்து விடுபடவும் வழி செய்கிறது. இதனை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு உடல் பலத்தை கொடுக்கும். ஆகவே இதனை வீட்டில் பால்கோவா போல் செய்தும் சாப்பிடுவார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 பசு மாட்டின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |