சேப்பங்கிழங்கு பயன்கள்
பொதுவாக நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் ஒரே மாதிரியான காய்கறிகளை எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்த காய்கறியில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஆனால் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி கிழங்கு வகையில் பெரும்பாலும் விரும்புவது உருளைக்கிழங்கு தான். அத்தகைய உருளைக்கிழங்கு வரிசையில் சேப்பங்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை சாப்பிடும் அளவிற்கு நாம் யாரும் சேப்பங்கிழங்கு சாப்பிடுவதில்லை. ஆனால் நமக்கு தெரியாத நிறைய மருத்துவ குணங்கள் சேப்பங்கிழங்கில் இருக்கிறது. ஆகையால் இன்றைய பதிவில் சேப்பங்கிழங்கின் நன்மைகள் என்ன என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்
Seppankilangu Benefits in Tamil:
சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் E, கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கலோரிகள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கார்போஹட்ரேட் போன்ற அனைத்து சத்துக்களும் இருக்கிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதற்கு வழுவழுப்பான தன்மையுடன் இருக்கும்.
சேப்பங்கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் மற்றும் அதிக அளவு கலோரிகளும் இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த நன்மையை தருகிறது. அதுமட்டும் இல்லாமல் நரம்பு தளர்ச்சி சேற்று புண் போன்ற பிரச்சனைக்கும் சிறந்த பலனை அளிக்கிறது.
வயிறு பிரச்சனை நீங்க:
குடல் புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடைய முடியும்.
முகத்தில் பருக்கள் நீங்க:
ஆண்கள், பெண்கள் இருவருக்குமே முகத்தில் கரும்புள்ளி, பருக்கள், சரும சுருக்கம் மற்றும் இன்னும் சில பிரச்சனைகள் இருந்தால் சேப்பங்கிழங்கை பேஸ்ட் போல் அரைத்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். ஏனென்றால் சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் A மற்றும் வைட்டமின் C முகத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
மலச்சிக்கல் நீங்க:
மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைக்கு சேப்பங்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.
மாரடைப்பு வராமல் தடுக்க:
அடிக்கடி நாம் சேப்பங்கிழங்கு சாப்பிடும் போது மாரடைப்பு, இதய ரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.
கருணை கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள் |
சேப்பங்கிழங்கை சாப்பிட வேண்டியவர்கள்:
- ஜீரண கோளாறு உள்ளவர்கள்
- அதிக உடல் எடை உள்ளவர்கள்
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள்
- சரும பிரச்சனை உள்ளவர்கள்
- இரத்த ஓட்டம் சீராக உள்ளவர்கள்
சேப்பங்கிழங்கு சாப்பிட கூடாதவர்கள்:
சேப்பங்கிழங்கை எப்போது பச்சையாக சாப்பிட கூடாது. அதனை அவித்து அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான வகையில் சாப்பிட வேண்டும்.
- பக்கவாதம் உள்ளவர்கள்
- இதயம் பலவீனமானவர்கள்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவில் சேப்பங்கிழங்கை சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |