வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அல்சர் குணமாக சித்த வைத்தியம் …!

Updated On: November 22, 2023 12:30 PM
Follow Us:
அல்சர் குணமாக
---Advertisement---
Advertisement

அல்சர் குணமாக சித்த வைத்தியம் …!

இன்றைய சமூகத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் அல்சர். குறிப்பாக அல்சர் வருவதற்கு முக்கிய காரணங்கள் சரியான நேரத்திற்குள் உணவு அருந்தாமல் இருப்பதினாலும் மற்றும் ரெடிமேட் உணவுகளை வாங்கி சாப்பிடுவதினாலும் இந்த பிரச்சனை அதிகமாக வருவதற்கான காரணங்கள் ஆகும்.

அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுகுடல் மற்றும் இரைப்பை அதிகமாக பாதிக்கப்படுகிறது. இந்த காரணமாக சிறுகுடல் மற்றும் இரைப்பை சிவந்து மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டு, வயிற்று புண் மற்றும் வலியையும் ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால், பின் விளைவுகளை அதிகமாக சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

சரி வாருங்கள் இவற்றில் அல்சர் குணமாக சித்த வைத்தியம் என்னென்ன இருக்கின்றது என்பதையும், அல்சர் வருவதற்கான காரணங்களையும், அறிகுறிகளையும், அதற்கான சித்த வைத்தியத்தையும், கட்டுப்படுத்தும் முறையையும் இவற்றில் காண்போம்.

அல்சர் குணமாக சூப்பரான பாட்டி வைத்தியம்

அல்சர் காரணங்கள்:

*சாப்பிடும் வேளைகளில் உணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது.

*தொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்.

*பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை அதிகமாக        பருகுவது.

*ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது.

*பர்கர், ஃபிரைட் ரைஸ் போன்ற செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது.

*ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது.

அல்சர் அறிகுறிகள்:

அல்சர் பிரச்சனைக்கான முதல் அறிகுறி வயிற்று வலிதான். பற்றி எரிவது போல வயிற்று வலி ஏற்படும். வயிற்றில் புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படும் போது, இந்த வயிற்று வலி ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் இருக்கும் போது இன்னும் அதிகமாக ஏற்படும்.

*வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது,

*மலத்தில் ரத்தம் வெளியேறுவது,

*குமட்டல் அல்லது வாந்தி,

*காரணமின்றி உடல் எடை குறைவது,

*பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்.

அல்சர் குணமாக சித்த வைத்திய குறிப்புகள்..!

அல்சர் குணமாக சித்த வைத்தியம்: 1

*வால்மிளகை பொடியாக அரைத்து 1/2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் குடித்து வர அல்சர் பிரச்சனையை சரிசெய்யலாம்.

*அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து, காலை வேளையில் அருந்தலாம்.

*காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து, குடித்து வந்தால் வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.

அல்சர் குணமாக சித்த வைத்தியம்: 2

*ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம், வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல் இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம், 3 வேளை உண்ணலாம்.

*சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்து பாலில் கலந்து பருகலாம்.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க – Udal Edai Athikarikka SUPER TIPS..!

அல்சர் குணமாக சித்த வைத்தியம்: 3

*கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

*பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து, சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

அல்சர் குணமாக சித்த வைத்தியம்: 4

*கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளியவைத்து இறுத்துப் பருகலாம்.

*மணத்தக்காளிக் கீரையை, பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

அல்சர் குணமாக சித்த வைத்தியம்: 5

*பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவு எடுத்து பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

*சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

அல்சர் வராமல் இருப்பதற்கு சிறந்த வழி:

*காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

*உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

*பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

*தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

*சரியான நேரத்துக்கு தூக்கம் அவசியம்.

*அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now