கருஞ்சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க

Advertisement

கருஞ்சீரகம் தீமைகள் 

கருஞ்சீரகம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது என்று நமது முன்னோர்கள் காய் மருத்துவதிர்ளும், உணவு சார்ந்த விஷயங்களிலும் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். இதனுடைய பயன்களை தற்பொழுது அறிந்துகொண்ட மக்கள் கருஞ்சீரகத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது இயற்கை சார்ந்த பொருள் என்றாலும் இதனை அதிகளவு பயன்படுத்தினால் உடலில் நாம் தான் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதன் வகையில் இன்று நாம் கருஞ்சீரகம் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் தீமைகள் பற்றி படித்தறியலாம் வாங்க.

கருஞ்சீரகம் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் தீமைகள் – Side Effects of Karunjeeragam in Tamil:கருஞ்சீரகம்

இந்த கருஞ்சீரகத்தை ஒருவாறு தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டிருந்தால் வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும். இன்னும் சிலருக்கு வலிப்பு அபாயத்தை உண்டாக்கும். அதனால் உங்களுக்கு இது பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை பரிசோதித்து பிறகு பயன்படுத்துவது நல்லது.

கருஞ்சீரக விதையில் இருந்து தயார் செய்யப்படும் ஜெல்லை முகத்தில் பயன்படுத்தும் போது சரியான முறையை பயன்படுத்துவது சிறந்தது. ஏனென்றால் இது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை வெடிப்புகளை ஏற்படுத்தும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ அதனால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று தெரியுமா..?

கர்ப்பக்காலத்தில் கருஞ்சீரகத்தை மருத்துவத்திற்கு என்று பயன்படுத்தும் போது அது கருப்பை சுருக்கத்தை நிறுத்தும். ஆக இது கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல.

குழந்தைகளுக்கு கருஞ்சீரக விதையை பொடி செய்து அல்லது கருஞ்சீரக விதையை மருந்தாக கொடுக்கும்போது நீண்ட நாட்கள் கொடுக்க கூடாது. அது குழந்தையின் உடல் நலத்திற்கு பக்கவிளைவுகளை ஏற்படும்.

பொதுவாக கருஞ்சீரக விதை இரத்த உறைதலை குறைத்து அதிக இரத்த போக்கை ஏற்படும் ஆபத்தான தன்மையை கொண்டது. அதிகளவு கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால் இரத்தபோக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளும் போது உடலில் சர்க்கரை அளவை குறைக்க செய்யும். சர்க்கரை நோயாளிகள் மருந்துகளோடு கருஞ்சீரகம் விதையை எடுத்துக்கொள்ளும் போது அது திடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும். ஆக சர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளும் போது அவ்வபோது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பொதுவாக கருஞ்சீரகம் இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும் என்பதால், குறைந்த இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் இந்த கருஞ்சீரகம் விதையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குங்குமப் பூ தீமைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement