தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

weight loss

உங்க தொப்பை குறைய சும்மா நச்சுனு சிம்ரன் மாதிரி இடுப்பை பெற இதோ (weight loss) டிப்ஸ்..!

வணக்கம் உறவுகளே, ஓடி விளையாடு பாப்பா பாட்டில் நம் பாரதியார் ரொம்ப அழகாக ஒரு விஷயம் சொல்லி இருப்பார்.

காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு
என்று வழக்க படுத்திக்கொள் பாப்பா

இதெல்லாம் நாம், நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதே இல்லை. வார விடுமுறைகளில் ஷாப்பிங் மால்களில் உள்ள விளையாட்டு உலகம் என்ற பெயரில் இருக்கும் பொழுதுபோக்கு சாதனங்களில் அவர்களை விளையாட விடுகின்றோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் படிப்பு இல்லை, எழுந்தவுடன் காபி, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல டிபன், மாலை ஆனதும் ஒரு சிற்றுண்டி அப்படினு ஆகிடுச்சு.

நிறைய நண்பர்கள் காபி குடிச்சி குடிச்சி தொப்பை அதிகமாக ஆகிடுச்சினு சொல்லுவாங்க. ஏன் ஒரு சில பேருக்கு காபி குடிச்ச தான் அன்றைய வேலையே போகும்னு கூட சொல்லுவாங்க. அப்படி காபி குடிக்கிறவங்களுக்கு அதே காபி வைத்து உங்கள் தொப்பையை குறைக்கலாம் (weight loss) வாங்க.

தினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..?

அட செம விஷயமாக இருக்குல, அந்த காபில ஒரு குறிப்பிட்ட பொருளை சேர்த்து குடிச்சோம்னு வச்சுங்கோங்க தொப்பை குறைவது (weight loss) மட்டுமல்ல உடம்பில் வளர்சிதை மாற்றமும் உண்டாகும்ங்க, அது இதயத்தை பாதுகாக்கும். தொப்பையை குறைக்க (weight loss) அந்த வழி என்னன்னு பார்ப்போம் வாங்க…

1. பட்டை :

பொதுவாக அசைவம் சமைக்க முக்கியமான ஒன்று கறி மசாலா , அதிலும் மிக முக்கியமான ஒன்று பட்டை. இதில் ஏராளமான மருத்துவ குணம் இருக்கு. இது உடலின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து கொழுப்பு படிவதை தடுக்குது. பட்டை என்ற மருத்துவ பொருளோடு காப்பி கலந்து குடிச்சோம்னா கொழுப்பை குறைத்து தொப்பை(weight loss) வராமல் தடுக்கிறது.

2. தேங்காய் எண்ணெய் :

தேங்காயில் இருக்குற சிறப்பு எண்ணிலடங்காது, அதனால் தான் கேரளாவில் இருப்பவர்கள் அதிகமாக தொப்பை உள்ளவர்களா இறுக்கமாட்டாங்க. தேங்காய் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்க வைத்து கொழுப்பை குறைத்து(weight loss), உடல் எடையை சரியாக மெயின்டென் பண்ணுது.

10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக !!!

3. தேன் :

சுத்தமான தேனை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தோம்னு வச்சிக்கோங்க. உடலுக்கு தேவையான அதிக சத்துக்களை தருவது மட்டுமல்லாமல் தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது. இப்போ தெரியுதா தேன் எவ்வளவு முக்கியம்னு.

4. பட்டை, தேங்காய் எண்ணெய், தேன் கலவை செய்முறை :

தேன் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 3/4 கப்
பட்டை தூள் – 1 ஸ்பூன்
கோகோ பவுடர் – 1 ஸ்பூன்

இதெல்லாம் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை காற்று புகாத ஒரு ஜாடிக்குள் போட்டு நன்கு மூடி அடைத்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை டெய்லி நாம் காபி குடிக்கும் போது கலந்து குடிச்சி பாருங்க அப்புறம் உங்க தொப்பை குறைவது(weight loss) கண்கூடாகவே பார்த்து அசந்து போவீங்க. நீங்களும் நல்ல ஆரோக்கியமாக இருப்பீங்க.

ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ? -சூப்பர் IDEA..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.