சைனஸ் தலைவலி குணமாக..! Siddha maruthuvam for sinus..!
Siddha maruthuvam for sinus:- சைனஸ் என்பது சித்த மருத்துவத்தில் நீர்க்கோவை அல்லது பீனிசம் நோய் என்று சொல்லப்படுகிறது. இந்த சைனஸ் பிரச்சனை தலையில் அதிகளவு நீர்கோத்துக்கொண்டு அதிகப்படியான தலைவலி பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. நம் உடலில் ஏற்படும் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை எடுத்து கொண்டோம் என்றால் மிக எளிதிலேயே அந்த பிரச்சனையை சரி செய்துவிடலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளை சந்திக்கவேண்டியதாக இருக்கும்.
சரி இந்த பதிவில் சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள், சைனஸ் குணமாக சித்த மருத்துவம் (siddha maruthuvam for sinus) என்ன உள்ளது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் |
சைனஸ் அறிகுறிகள் – sinus symptoms in tamil:-
இந்த சைனஸ் பிரச்சனைக்கான முக்கிய அறிகுறிகள், காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல், முன் நெற்றி பகுதி மற்றும் புருவங்களில் அதிகப்படியான வலி ஏற்படும், மற்றும் தொடர்ந்து அடுக்கு தும்மல் போன்றவை சைனஸ் பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
சைனஸ் குணமாக சித்த மருத்துவம்..! siddha maruthuvam for sinus..!
சைனஸ் சித்த மருத்துவம் – பேரத்தை பொடி:
இந்த சைனஸ் குணமாக சித்த மருத்துவம் (sinus treatment in siddha in tamil) பேரத்தை பொடி ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. இந்த பேரத்தை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
சைனஸ் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
சைனஸ் நாட்டு மருத்துவம் – ஆடாதொடை:
ஆடாதொடை இலைகள் மற்றும் வேர் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது கிராமப்புறங்களில் பெரும்பாலும் கிடைக்க கூடியது. அல்லது இதனை நாட்டு மருத்துவ கடைகளில் பெறலாம்.
இந்த ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் ஒரு கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக காய்ச்சி, தேன் கலந்து தொடருந்து அருந்திவர சைனஸ் குணமாகும்.
சைனஸ் நாட்டு மருத்துவம் – தும்பை பூ:
தும்பை பூவை சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தலாம். இந்த தும்பை பூவானது சாலை ஓரங்களிலே காணப்படும் ஒன்றாகும். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..! |
சைனஸ் சித்த மருத்துவம் – வெற்றிலை சாறு:
வெற்றிலை நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.
சுக்கு:
Sinus treatment in siddha in tamil – சுக்கு நமது வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு பொருளாகும். இதனை பற்றாக போட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நீர்க்கட்டு நீங்கும். சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம். இதனால் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும், குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உணவில் தடுப்பதால் சைனஸ் பிரச்சனை அதிகரிப்பதை தடுக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |