சிறியாநங்கை மருத்துவ பயன்கள் | Siriyanangai Uses in Tamil

Siriyanangai Uses in Tamil

சிறியாநங்கை செடியின் பயன்கள்

இந்த உலகில் ஏராளமான செடிகள் இருக்கின்றன.. அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சில வகையான மூலிகை செடிகள் நமது ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அத்தகைய மூலிகை செடிகளில் ஒன்று தான் சிறியாநங்கை. இந்த சிறியாநங்கை மூலிகை செடியை நமது வீட்டில் வளர்த்து வந்தால் பாம்புகள் நமது வீட்டை அண்டாது என்று சொல்வார்கள். சரி இந்த பதிவில் சிறியாநங்கை மருத்துவ பயன்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

சிறியாநங்கை பயன்கள்

நீரிழிவு நோய் குணமாக:

நீரிழிவு நோய் குணமாக

Siriyanangai Uses in Tamil: சிறியாநங்கை இலை பார்ப்பதற்கு மிளகாய் செடி போன்று இருக்கும். இதனை நீரிழிவு நோயாளிகள் உடகொள்வதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.

சிறியாநங்கை உண்ணும் முறை:- சர்க்கரை நோயாளிகள் சிறியாநங்கை இலைப் பொடியுடன், காய்ந்த நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் இலை பொடி, இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வருவதினால் நீரிழிவு நோய் குணமாகும்.

விஷக்கடி குணமாக மருந்து:

விஷக்கடி குணமாக

Siriyanangai Uses in Tamil:- பாம்பு, தேள், பூரான் இது போன்ற அதிக விஷம் நிறைந்த பூச்சிகள் கடித்தால் அவசர சிகிச்சைக்கு உங்கள் வீட்டில் சிறியாநங்கை இலை இருந்தால் அதனை அரைத்து உருண்டையாக்கி விழுங்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மை நீக்கப்படும். பிறகு உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

உடலில் ஏற்படும் வீக்கம் குணமாக:

வீக்கம் குணமாக

சிறியாநங்கை இலை உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க மிகவும்  அற்புதமான மருந்தாகும். ஆகவே எலுமிச்சை சாறுடன், சிறிதளவு சிறியாநங்கை இலைகளை சேர்த்து நன்றாக அரைத்து நம் உடலில் வீக்கம் ஏற்பட்டால் வீக்கங்கள் மீது பத்து போட்டுவர வீக்கத்தின் அளவானது குறைய ஆரம்பிக்கும்.

தேமல் குணமாக மருந்து:-

தேமல் குணமாக மருந்து

Siriyanangai Uses in Tamil:- தேமல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவருமே இந்த சிறியாநங்கை வேருடன் அருகம்புல் வேரையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையாக தேமல் பிரச்சனைகளும் குணமாகும். இருப்பினும் இந்த மருந்தை நீங்கள் எப்போதெல்லாம் எடுத்து கொள்கின்றிகளோ அப்போதெல்லாம் உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சிறியாநங்கை மருத்துவம்:-

சிறியாநங்கை

Siriyanangai Uses in Tamil:- 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்தில் ஒரு முறையாவது சிரியாநங்கை இலையை அரைத்து அதன் சாறினை மட்டும் தனியாக வடிகட்டி, அதனுடன் காய்ச்சாத பசும் பால் அல்லது மோருடன் கலந்து காலை வெறும் வயிற்றி பருகி வந்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று உங்களுக்கு தெரியுமா? உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படும். கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை வெளியேற்றும். குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பூச்சிக்கடி வயிற்றுப்போக்கு இது போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும். மஞ்சள் காமாலை, மலேரியா விஷக் காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளி ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும். தோல் நோய் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணப்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகளை குணப்படுத்தும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips