கால் மேல் கால் போட்டு உட்காருவது
இன்றைய கால கட்டத்தில் யாரும் நாற்காலியில் உட்காரும் போது சாதாரணமாக உட்காருவதில்லை. ஏனென்றால் ஸ்டைலாகவும், ஆடம்பராகவும் இருப்பதற்காக கால் மேல் கால் போட்டு உட்காருகிறார்கள். இப்படி உட்காரும் போது நம் முன்னோர்கள் இப்படி உட்காராத காலை கீழே போட்டு உட்காரு என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் போது போ என்று சொல்லி விடுவோம். நம் முன்னோர்கள் எந்த விஷயத்தையும் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் இன்றைய கால் மேல் கால் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கால் மேல் கால் போட்டு உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகள்:
தூங்கும் முன் பாதங்களில் மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகளா..?
இரத்த அழுத்த பிரச்சனை:
கால்களை நீண்ட நேரம் ஊன்றி உட்கார்ந்தால் நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதால் இரத்தம் அழுத்தம் அதிகரிக்கிறது. உங்களுக்கு இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி கால் மேல் கால் போட்டு அமர்ந்து சாப்பிடாதீர்கள்.
வாதம் ஏற்படும்:
நீங்கள் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு உட்காருவது வாதம் அல்லது பெரோனியல் பக்க வாதத்தை ஏற்படுத்தும்.
இரத்த ஓட்டத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்:
நீங்கள் காலை குறுக்கே போட்டு அமர்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை பெரிதும் பாதிக்கிறது. காலில் அழுத்தம் கொடுக்கும் போது இரத்த ஓட்டம் சீராக செல்லாது.
இடுப்பில் வலியை ஏற்படுத்தும்:
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதால் இரத்தம் உறைந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இப்படி அமர்வதனால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் வலியை ஏற்படுத்தும். உடலை வளைத்து கால் மேல் கால் போட்டு அமர்வதால் முதுகு தண்டு பாதிப்படையும்.
நீங்கள் எந்த நிலையில் அமர்ந்தாலும் அதே நிலையில் நீண்ட நேரம் உட்காராதீர்கள். அடிக்கடி உட்காரும் நிலையை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக கால் மேல் கால் போட்டு அமர கூடாது. இல்லை நான் உட்காருவேன் என்று சொன்னால் மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் முடிந்தவரை கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிர்த்து விடவும்.முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |