வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்கின் அலர்ஜி எதனால் வருகிறது..? காரணம் என்ன தெரியுமா..?

Updated On: May 16, 2024 6:24 PM
Follow Us:
Skin Allergy Reasons in Tamil
---Advertisement---
Advertisement

Skin Allergy Reasons in Tamil

இப்போது இருக்கும் கால கட்டத்தில் நம்மில் பலருக்கும் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அது போல நாம் அனைவருமே உடலில் ஏதாவது பிரச்சனை என்றால், அதை அப்படியே விட்டு விட கூடாது. அந்த பிரச்சனை எதனால் நமக்கு வந்தது, அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு சரியான முறையில் சிகிச்சை எடுக்க வேண்டும். அப்படி நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஸ்கின் அலர்ஜி வந்திருக்கும். ஸ்கின் அலர்ஜி என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆகையால் இந்த ஸ்கின் அலர்ஜி எதனால் வருகிறது, அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இயற்கை முறையில் அலர்ஜி, தடிப்புகள் நீங்க வீட்டு வைத்தியம்

ஸ்கின் அலர்ஜி என்றால் என்ன..? 

skin allergy

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது தோல் தான். அப்படி இருக்கும் தோலில் ஏதாவது பாதிப்பு என்றால் நாம் அதை சும்மா விடக்கூடாது. ஸ்கின் அலர்ஜி என்பது தமிழில் தோல் ஒவ்வாமை என்று சொல்லப்படுகிறது. தோல் ஒவ்வாமை என்பது நோய் எதிர்ப்பு அமைப்பு சில பாதிப்பில்லாத பொருட்களுக்கு வினைபுரிந்து அவற்றை ஒவ்வாமை என அடையாளம் காணும் ஒரு நிலை ஆகும். தோல் ஒவ்வாமை கொண்ட ஒரு குறிப்பிட்ட பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது எதிர்வினையை அனுபவிக்கிறது.

அதாவது நாம் சாப்பிடும் உணவுகளோ அல்லது மருந்து மாத்திரைகளோ அல்லது நாம் பயன்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் உடலுக்கு ஒத்துழைக்காமல் போவதால் தோலில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி ஸ்கினில் அலர்ஜி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதை பற்றி தற்போது காண்போம்.

தோல் நோய்க்கு சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஸ்கின் அலர்ஜி எதனால் வருகிறது..? 

skin allergy

பொதுவாக ஸ்கின் அலர்ஜி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன செயல்களால் கூட ஸ்கின் அலர்ஜி ஏற்படுகிறது. அதை பற்றி தற்போது காண்போம்.

  • குளிர் அல்லது சூடான வெப்பநிலை
  • மகரந்தம்
  • சூரிய ஒளி
  • தண்ணீர்
  • உணவு
  • பூச்சிகள்
  • மருந்துகள்

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் கூட தோலில் அலர்ஜி உண்டாகிறது. அது எப்படி என்றால்,

நாம் பயன்படுத்தும் அழகுச் சாதனப் பொருள்கள், சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நெயில்பாலிஷ், முகப்பவுடர், கிரீம் போன்ற பொருட்களால் ஸ்கினில் அலர்ஜி ஏற்படுகிறது.

அதுபோல நாம் பயன்படுத்தும் உடைகள், கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தாலும் உடலில் அரிப்பு போன்ற ஸ்கின் அலர்ஜி உண்டாகும்.

சிலருக்கு பிளாஸ்டிக், தங்கம், வெள்ளி, கவரிங் போன்ற ஆபரணங்களாலும் ஸ்கின் அலர்ஜி உண்டாகும்.

இன்னும் சிலருக்கு துணி துவைக்க பயன்படுத்தும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு போன்றவற்றாலும் ஸ்கின் அலர்ஜி ஏற்படும்.

அதுபோல கால நிலை மாற்றத்தினாலும் சிலருக்கு ஸ்கின் அலர்ஜி உண்டாகிறது. அதாவது, வெயில் காலத்தில் சிலருக்கு அரிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் வறட்சி காரணமாக அரிப்பு ஏற்படும்.

உடல் அலர்ஜியை தடுக்க சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன தெரியுமா

எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும் ஸ் கின்னில் அலர்ஜி உண்டாகும்.

குறிப்பாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் கூட நமக்கு ஸ்கின் அலர்ஜியை உண்டாக்கும். அதாவது பால் பொருட்கள், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் என்று நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும்.

அதுபோல நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை என்று இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஸ்கின் அலர்ஜி உண்டாகும்.

நாம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் காரணமாகவும் நமக்கு ஸ்கின் அலர்ஜி உண்டாகும்.

இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில செயல்களால் ஸ்கின் அலர்ஜி உண்டாகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now