தோல் நோய் நீங்க மருத்துவம்..! Skin diseases treatment in tamil..!

Advertisement

தோல் நோய் நீங்க மருத்துவம்..! Skin diseases treatment in tamil..!

Skin diseases treatment in tamil:- மனித உடலின் மிக பெரிய உறுப்பாக விளங்குவது தோல்தான். நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை பாதுகாப்பதும் தோல் தான். மேலும் வெப்பநிலையை சமப்படுத்துவதும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் நம் உடலுக்கு தீங்குவிளைவிக்க கூடிய பல வகையான நுண்கிருமிகளையையும் உயிர்வாழ இடமளிக்கின்றது என்பதும் அதிர்ச்சியான தகவல்தான். நம் தோளில் பலவகையான நுண்கிருமிகள் இருந்தால் அது நம் இரத்தத்தில் கலந்து விட அதிக வாய்ப்புகள் உள்ளது. நுண்கிருமிகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டால் பின் நம் உடலில் பலவகையான தோல் நோய்கள் ஏற்படும். அதாவது தோல் அரிப்பு, தோல் வெடிப்பு, தோல் சிவந்து போகுதல், படை, வெண்படை, தோல் நிறமாற்றம், தோளில் செதில் செதிலாக கொட்டுதல், தோல் மரத்து போகுதல் என்று பலவகையான தோல் நோய்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

சரி இந்த பதிவில் அனைத்து வகையான தோல் நோய்கள் குணமாக இயற்கை மருத்துவம் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

உங்கள் விரல் நகம் சொல்லும் நோய்..!

Home remedies for skin diseases in tamil..!

தோல் நோய் மருத்துவம்: 1

சதுரக்கள்ளி

சகலவிதமான தோல் நோய்களை குணப்படுத்த ஒரு சிறந்த சித்த மருத்துவ பொருளாக விளங்குவதுதான் சதுரக்கள்ளி. இந்த சதுரக்கள்ளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த சதுரக்கள்ளியினை சிறிதளவு இடித்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தோல் நோய் உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்து வர 100 சதவீதம் நிவாரணம் கிடைக்கும்.

தேமல் மறைய என்ன செய்வது

தோல் நோய் மருத்துவம்: 2

சதுரக்கள்ளி சாற்றில் சிறிதளவு மிளகினை ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள், பின் நல்லெணெயில் அந்த மிளகினை சேர்த்து 10 நாட்கள் வரை ஊறவையுங்கள். பின் அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனை நீங்கும் மற்றும் தலை அரிப்பு குறையும்.

கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம்..!

தோல் நோய் மருத்துவம்: 3

ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை பறித்து எடுத்து கொள்ளுங்கள், இந்த வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இந்த இயற்கை மருந்தை தோல் நோய் உள்ள இடத்தில் தடவி நன்றாக காயவிடுங்கள். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மஞ்சள் மற்றும் வேப்பிலை இவை இரண்டும் கிருமிநாசினி பொருளாக விளங்குவதால் உடலில் நுழைந்துள்ள கிருமிகளை அளிக்கும், பின் உடலில் ஏற்பட்டுள்ள தோல் நோய்களும் குணமாகும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement