Skin Rashes Treatment at Home in Tamil
தோல் வியாதிகள் வந்துவிட்டால் பல பேர் நம்மிடம் பழக பேச கூட யோசிக்கின்றனர்!நம்முள் பல பேர் தோல் அரிப்பு, சொரி சிரங்கு, கரப்பான், வெண்படை, தேமல் போன்ற பல பல வித்தியாச தோல் நோய்கள் ஏற்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றன.
தோல் நோய் வந்துவிட்டாலே நமது தோல்தான் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.
இதனால் இயற்க்கையாக உள்ள தோலின் அழகு கெட்டு தோலானது அழகற்று போகிறது.
பல வழிகளில் தோல் வியாதிகள் நமக்கு வருகின்றன. எனவே தோல் வியாதிகள் எவ்வாறு வருகின்றன என்பதை கண்டு அதற்க்கு ஏற்ப தீர்வு காண வேண்டும்.
பல மருத்துவர்களிடம் சென்றும் பயன் இல்லாமல் இருக்கீறிர்களா?
உங்கள் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தோல்நோய்களை நம்மிடம் இருந்து விரட்ட முடியும். தோல் நோய்களில் இருந்து விடுபட சில மருத்துவகுறிப்புகளை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்!
தோல் வியாதிகள் வர முக்கிய காரணம்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇
https://bit.ly/3Bfc0Gl
- தோல் வியாதிகள் வர முக்கிய காரணம் உடலில் அதிக கழிவுகள் தேங்கி இருப்பதுதான்.
- அதிக ஜங்க் புஃட்கள் அதிகம் சாப்பிடுதல்.
- மலம் சரியாக கழிக்காமல் இருப்பது.
- உடலில் வியர்வை வெளியேறாமல் இருப்பது போன்றவைகளால் இரத்தத்தில் டாக்ஸின் அளவு அதிகமாகிறது. இதனால் தோல் நோய்கள் எளிதாக நமக்கு வந்துவிடுகின்றன.
👉தோல் நோய்க்கு சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
குறிப்பு 1:
தோல் நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- குப்பைமேனி இலை பொடி – 2 டீஸ்பூன்
- வேப்பிலை போடி – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 100ml
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் முதலில் தேங்காய் எண்ணைய்யுடன் குப்பைமேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- நன்கு கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். தயார் செய்த எண்ணெய்யினை சூடு ஆரிய பிறகு ஒரு பாட்டில் ஊத்திக்கொள்ள வேண்டும்.
- இந்த எண்ணெயினை உங்களுக்கு அரிப்பு உள்ள இடங்களில் தினசரி பயன்படுத்தி வருவதினால் உங்கள் அரிப்புகள் முற்றிலும் நீங்கிவிடும்.
குறிப்பு 2:
தேவையான பொருள்:
- சோற்றுக் கற்றாழை ஜெல்
பயன்படுத்தும் முறை:
- இயற்கையாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஜெல்லை எடுத்து அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் உங்கள் அரிப்புகள் விரைவில் குறைய தொடங்கும்.
- சோற்றுக் கற்றாழை ஜெல் தோல் அரிப்பிற்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது.
👉தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்!!!
குறிப்பு 3:
தேவையான பொருட்கள்:
- காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை – 1
- மிளகு – 3
- உப்பு – ஒரு கல்
செய்முறை :
- காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை 1 , மிளகு – 2, உப்பு 1 கல் இவற்றை சேர்த்து மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
- காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்கள் விரைவில் நீங்கும்.
குறிப்பு 4:
- உடலில் தேங்கி உள்ள நச்சு கழிவுகளினாலும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
தேவையான பொருள்:
- விளக்கெண்ணெய் – 50ml
பயன்படுத்தும் முறை:
- அதிகாலை எழுந்தவுடன் 50ml விளக்கெண்ணையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலம் நன்றாக வெளியேறும் அதனுடன் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகள் நீங்கும்.
- இவ்வாறு செய்வதினால் தோல் நோய்கள் வருவதை தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.
குறிப்பு 5:
தேவையான பொருள்:
- திரிபலா பொடி(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
பயன்படுத்தும் முறை:
- இரவு உணவு சாப்பிட்ட பின் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான சுடு நீரில் 1 ஸ்பூன் திரிபலா போடி சேர்த்து நன்கு கலந்து குடித்து வரவும்.
- இதனால் மால குடலில் உள்ள மலங்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.உடலில் தேங்கி இருக்கும் நச்சு கழிவுகளை நீக்கினால் மட்டுமே தோல்நோய்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
👉குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..!
தோல் நோய் குணமாக உணவு:
- காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அருந்துதல்
- சார்ச்சத்துள்ள உணவுகள் சேர்த்துக் கொள்ளுதல்.
- கொய்ய்யப்பழம் , பப்பாளி பழம், வாழைப்பழம் போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தோல் நோயால் அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடாதவை:
- கருவாடு
- கம்பு
- சோளம்
- வாழைக்காய்
- புளி
- பாகற்காய் போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |