வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தூங்குவதனால் இத்தனை நன்மைகளா ?

Updated On: April 24, 2024 7:16 PM
Follow Us:
sleping benefits tamil
---Advertisement---
Advertisement

Thunguvadhanal Erpadum Nanmaigal

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கம் எந்தளவுக்கு பங்காற்றுகிறதோ அந்தளவிற்கு ஒருவர் தூங்கும் பழக்கமும் சரியான முறையில் பின்பற்றவேண்டும். தூக்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. தூக்கம் வரும் போது  நம்மால் கட்டுப்படுத்தவும் முடியாது. அப்படி தூக்கத்தை கட்டுப்படுத்தினாலும் உடலிற்கு பெரிய ஆபத்தை கொடுத்து விடும். தூக்கம் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரி மேலும் தூங்குவதனால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தூங்குவதனால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள் :

thunguvadhan nanmai

நாம்  தூங்கும் போது தான் நம் உடலில் இருக்கும் வளர்சிதை ஹார்மோன்கள் சுரக்கின்றன. பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் உருவாகின்றன. உடலின் தசைகள் தூங்கும் போது தான் வளர்ச்சி அடைகின்றன. நோய் எதிர்ப்பு சக்திகள் நாம் சரியான முறையில் தூங்கினால் தான் உடலில் காணப்படும். மன அழுத்தத்திற்கு ஒரே தீர்வாக காணப்படுவது தூக்கம் தான்.

நியாபக சக்தி :

ஒருவர் சரியாக தூங்காத போது நினைவாற்றல் குறைகிறது. நமது மூளை சிறப்பாகவும் தெளிவாகவும் இருப்பதற்கு தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்குவதனால் நம் நினைவாற்றல்கள் பெருகுகிறது. அதிக விஷயங்களை நம்மால் நம் மூளையில் சேமித்து வைக்க முடிகிறது.

சீரான மனநிலை :

நமது மனமும் உடலும் ஒரே நேர்கோட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நம் மனம் பாதிப்படையும் போது உடலும் பாதிக்கப்படுகிறது. அதே நம் மனம் சரியான நிலையில் இருக்கும் போது உடலும் ஆரோக்கியமாக காணப்படும். அதற்கு நாம் சரியான முறையில் தூங்க வேண்டும் சரியாக ஒரு மனிதன் 8 மணி நேரத்திற்கு தூங்க வேண்டும். குறைந்தபட்சமாக 6 மணி நேரமாவது உறங்க வேண்டும். தூக்கத்தின் நேரம் குறையும் போது ஒரு மனிதன்  மன அளவில் பாதிப்படைகிறான். மன அழுத்தம் ஏற்படுவதற்கும் தூக்கமின்னமை காரணமாகும். நீங்கள் சரியான முறையில் தூங்கும்போது மனதில் உண்டாகும் பதட்டம், மன சோர்வு ஆகியவை குணமாகும்.

இதய ஆரோக்கியம் :

ஒருவர் சரியான முறையில் தூங்கும்போது இரத்த அழுத்தம் குறைந்து இதயம் ரிலாக்ஸாக காணப்படும். சிலருக்கு இதய துடிப்பு சராசரிஅளவை விட அதிகமாக துடிக்கும். இதற்கு காரணம் தூக்கமின்மை. சரியாக துங்காவிட்டால் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். தூக்கமின்மையால் இதயத்தில் வீக்கம், இரத்த நாளங்கள் பாதிப்படையலாம். அதனால் சரியான முறையில் தூங்குவதை நடைமுறை படுத்திகொள்ளுங்கள்.

ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now