பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..! Athimathuram Benefits in Tamil..!

athimathuram

athimadhuram benefits in tamil

Athimathuram benefits in tamil:  அதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுரம் (licorice) வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது. இந்த அதிமதுரம், அனைத்து ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடி. இந்த அற்புத மருத்துவ குணங்கள் வாய்ந்த அதிமதுரம் (licorice பொடி) நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கும் சக்தியுடையது.

இப்போது நாம் இந்த பகுதியில் அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) பற்றி சிலவற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!

தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) – உதிர போக்கு நிற்க:

கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப் போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் (licorice benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே கருவுற்ற பெண்கள் அதிமதுரம் (licorice powder) மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.

அதிமதுரம் பொடி – சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் :

சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் அனைத்து பெண்களுக்கும் பிரசவ காலங்களில் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றுதான் ஆசை படுவார்கள்.

இருப்பினும் சிலருக்கு சுகப்பிரசவம் ஆகும், சிலருக்கு சிசேரியன் சிகிக்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பார்கள்.

அதிமதுரம் பொடி பயன்படுத்தும் முறை: இருப்பினும் கருவுற்ற பெண்கள் கற்பகாலங்களில் அதிமதுரம் மற்றும் தேவாரம் இவைகளை 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

அதிமதுரம் பயன்கள் (Licorice Benefits) – வயிற்றுப்புண் குணமாக:

அதிமதுரத்துண்டுகளின் பொடியை (licorice powder) நீரில் போட்டு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும், பின்பு மறுநாள் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக !!!

அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) – மூட்டுவலிக்கு:

athimadhuram benefits in tamil: நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் (licorice powder) குடிப்பது நிவாரணமளிக்கும்.

சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) தொண்டை பிரச்சனை:

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்.

இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) – தலை முடி பிரச்சனைகளுக்கு:

அதிமதுரத்தைத் (licorice powder) தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலை முடி வேர்களில் நன்றாக அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி பிரச்சனைகள் நீங்கும்.

தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். தலை முடி பட்டு போல் மினுமினுப்பாக இருக்கும், மேலும் அகால நரையும் நீங்கும்.

அதிமதுரம் பயன்கள் (Athimathuram Uses) – கண் எரிச்சல் நீங்க அதிமதுரம்:

அதிமதுரம் (licorice powder), கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளி பெறும்.

இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.

அதிமதுரம் / Athimathuram in English:  Licorice என்று பெயர்.

 

10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன…

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil