தொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..! Sore throat treatment in tamil..!

Advertisement

தொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம் (Sore throat treatment in tamil)..!

Natural health tips in tamil:– குளிர் காலம் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் உடலில் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதாவது சளி, இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் மற்றும் மழை காலங்களில் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏன்னெனில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும் போது முதலில் தொண்டைப்பகுதில் கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும். இது தொண்டை புண்ணை ஏற்படுத்தும்.

சரி இங்கு தொண்டை புண் எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தையும், தொண்டை புண் குணமாக மூலிகை வைத்தியம் என்ன உள்ள என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

தொண்டை புண் வர காரணங்கள்:-

தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதே போல், அடெனோவைரஸ், எப்ஸ்டின் – பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும். சில உடல் உபாதைகள் காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும்.
சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது.

சரி இதற்கான thondai pun kunamaga மூலிகை வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாட்டு வைத்தியம்..!

தொண்டை புண் குணமாக தீர்வு: 1

இந்த தொண்டை புண் குணமாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை நெய்யில் குழைத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டை புண் குணமாகும்.

தொண்டை புண் குணமாக தீர்வு: 2

இந்த தொண்டை புண் குணமாக திரிபலா சூரணம் மிகவும் பயன்படுகிறது. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும். தண்ணீர் கொதித்ததும், ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக 1 நிமிடம் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின் வடிகட்டி மிதமான சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் தொண்டை புண் குணமாகும்.

தொண்டை புண் குணமாக தீர்வு: 3

இந்த தொண்டை புண் குணமாக ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை வாணலியில் வறுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் அந்த தண்ணீரை பருக வேண்டும். இவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தொண்டை புண் குணமாகும்.

தொண்டை புண் குணமாக தீர்வு: 4

இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால் கிருமிகளை அளிக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. எனவே தொண்டை புண்ணால் தினமும் அவதிப்படுபவர்கள் இஞ்சி ஜூஸ் பருகிவர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாட்டு வைத்தியம்..!

Thondai pun kunamaga: 5

பூண்டிலும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. எனவே தொண்டை புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு டேபிள் ஸ்பூன் வெது வெதுப்பான பூண்டு ஜூஸ் பருகிவர தொண்டை புண் குணமாகும்.

sore throat treatment in tamil: 6

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே ஆரஞ்சு ஜூஸை அடிக்கடி அருந்தி வருவதினால், தொண்டை புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

sore throat treatment in tamil: 7

புதினாவிலும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே புதினா சாறுடன் தயிர் கலந்து சாப்பிடுவதினால் இந்த தொண்டை புண் குணமாகும்.

sore throat treatment in tamil: 8

ஒரு கிளாஸ் வெது வெதுப்பனான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வாய் கொப்பளிப்பதினாலும் இந்த தொண்டை புண் குணமாகும்.

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement