முதுகெலும்பு ஆரோக்கியமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

Spine Healthy Foods in Tamil

Spine Healthy Foods

இன்றைய ஆரோக்கியம் பதிவில் முதுகெலும்பு வலுவாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிற்றோம். நாம் வாழும் இந்த அவசர உலகில் ஆரோக்கியமான உணவு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. சிலர் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. இன்னும் சிலர் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சாப்பிடுவதையே மறந்து விடுகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் நம் உடலில் எந்த பிரச்சனை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அதனால் நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் முதுகெலும்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்கள் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Spine Healthy Foods in Tamil: 

கீரை வகைகள்: 

கீரை வகைகள்

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரைகளில் இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை எலும்புகளை வலுவுடன் வைத்திருக்க உதவுகிறது. முதுகு எலும்புகளுக்கு வலிமையை கொடுத்து எலும்பு தேய்மானம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. அதனால் தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.

கேரட்: 

கேரட்

கேரட்டில் இருக்கும் சத்துக்கள் எலும்புகள் மற்றும் முதுகு தண்டுவடத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. அதனால் வாரத்தில் 3 நாட்கள் கேரட்டை உணவுடன் சேர்த்து கொள்வது நல்லது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

பால் பொருட்கள்:

பால் பொருட்கள்

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்களை சேர்த்து கொள்வது நல்லது. பெரும்பாலான பால் பொருட்களில் அதிக அளவு பால் உள்ளது. அதுபோல எலும்புகள் கால்சியத்தால் ஆனது.

அதனால் கால்சியம் இருக்கும் பால் பொருட்களை  உட்கொள்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பால், தயிர், பாலாடை உள்ளிட்ட பிற பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் எலும்புகளை பாதுகாக்கலாம். மேலும் பால் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

காய்கறிகள்:

காய்கறிகள்

பொதுவாக காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க காய்கறிகள் உதவுகின்றன. காய்கறிகள் மற்றும் அதில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை குறைவதால் முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதனால் சத்தான காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள். பச்சை காய்கறிகள் முதுகெலும்புகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், எலும்பு அமைப்பை வலுவாக்கவும் உதவுகிறது.

புரத சத்து அதிகம் உள்ள உணவுகள்
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்