கனவா மீன் பயன்கள் | Squid Fish in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் கணவாய் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த கணவாய் மீன் ஆனது பீலிக்கணவாய் என்ற தலைக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த கணவாய் வடிவி என்ற பெருவரிசையில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினத்தை சேர்ந்தவையாகும். பொதுவாகவே இந்த கணவாய் மீன்கள் 60 செ.மீ வரை வளரக்கூடியது. இந்த மீன்கள் பல இடங்களில் பிரபலமான உணவுகளாக இருக்கிறது.
இந்த கணவாய் மீன்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய உடல் தோள்களின் நிறத்தை இடத்திற்கு தகுந்தது போல மாற்றி கொண்டே இருக்கும். கணவாய் மீன் வகைகளில் பல மீன்கள் உள்ளன. இந்த கணவாய் மீன்களின் கண் விழிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அதாவது இந்த கணவாய் மீன்களின் கண் விழிகள் பார்ப்பதற்கு W வடிவில் இருக்கும். மேலும் இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மீன் உணவுகளுடன் ஏன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க..! |
கணவாய் மீன் நன்மைகள் | Squid Fish Benefits in Tamil:
- இந்த கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத ஒருவகையான மீன் ஆகும். இதில் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளடக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி எண்ணற்ற கனிமங்களும் வைட்டமின்களும் அதிகமாகவே அடங்கியுள்ளது. அதாவது என்னென்ன கனிமங்கள் என்றால் காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், போன்றவை அதிகமாக உள்ளன. சராசரியாக ஒரு மனிதனுக்கு இரண்டு மில்லி அளவுக்கு காப்பர்கள் தேவைப்படுகிறது. எனவே நாம் இந்த மீன்களை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான காப்பரின் அளவுகள் கிடைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
- அதோடுமட்டுமில்லாமல் இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை சிவப்பு அணுக்களை அதிகப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் இந்த வகையான மீன்கள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.
- இதில் உள்ள அதிகப்படியான காப்பர் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன. மூளைக்கு தேவையான அதிகப்படியான ஆக்சிஜன் காப்பரின் மூலமாக கிடைக்கின்றன. எனவே மூளை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
- இந்த கணவாய் மீன்கள் ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை குறைபாடுகளில் இருந்து தடுத்து, விந்துக்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தைராய்டு போன்ற பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
- கணவாய் மீன்களில் உள்ள வைட்டமின் B12 இதய நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இதயத்தை பாதுக்காப்பாக வைத்திருப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது. இந்த கணவாய் மீனில் இருக்கும் வைட்டமின் B3 இரத்தத்தின் சர்க்கரை அளவை சமச்சீராக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
- இந்த மீன்களை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அலர்ஜி, முடி உதிர்வு, தசைகளின் தளர்வு, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு இவை ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
- கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்று கூறுவார்கள். இதிலுள்ள கொழுப்பு இதய ஆபத்தை தடுக்கிறது. மேலும், தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |