சர்க்கரை வியாதி உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடலாமா..? சாப்பிடக்கூடாதா..?

Advertisement

சர்க்கரை நோய் உள்ளவர்கள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா.? | Sugar Patient can Eat Red Banana in Tamil

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பு சம்மந்தப்பட்ட எதையும் சாப்பிட மாட்டார்கள். இதனால் பல்வேறு பழங்கள் மற்றும் பலகாரங்களை தவிர்த்து விடுவார்கள். ஆனால் பழங்களில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் செவ்வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளன. ஆனால் இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடலாமா..? சாப்பிடக்கூடாதா..? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். வாருங்கள் அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா.?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா

செவ்வாழைப்பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெரும்.

செவ்வாழை பழத்தில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி  போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது கண்பார்ர்வை, உடல் சோர்வு, சிறுநீரக கற்கள் மற்றும் கல்லீரல் பிரச்சனை போன்றவற்றை நீக்கக்கூடியது.

சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!

 

 இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடலாமா..? என்றால் கட்டாயமாக சாப்பிடலாம். ஆனால் அவர்கள் உண்ணும் உணவின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், என்னதான் மாத்திரை சாப்பிட்டு வந்தாலும் அவர்கள் உண்ணும் உணவில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். உணவை கட்டுப்பாட்டுடன் எடுத்து கொண்டால் மட்டுமே சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உண்ணும் உணவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது காலையில் 5 இட்லி சாப்பிடுகிறார்கள் என்றால் 2 இட்லி மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் செவ்வாழை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கலாம். 
சர்க்கரை நோய் அறிகுறிகள்

 

செவ்வாழை பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது. செவ்வாழை பழங்கள் அமிலேஸ் மற்றும் குளுக்கோசிடேஸின் செயல்பாட்டை தடுக்கிறது. எனவே தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement