Sukku And Ginger Difference in Tamil
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! தினமும் நம் ஆரோக்கியம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் இந்த காலகட்டத்தில் நாம் நம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதுபோல நாம் உண்ணும் உணவிலேயே பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதாவது நாம் உண்ணும் உணவு பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. அப்படி மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும் உணவு பொருட்களில் ஓன்று தான் இஞ்சி மற்றும் சுக்கு. ஆனால் நம் அனைவருக்குமே இஞ்சிக்கும் சுக்குக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று தெரியாது. அதனால் நம் பதிவின் வாயிலாக இஞ்சி மற்றும் சுக்கு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் அதன் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே
இஞ்சி-சுக்கு இரண்டும் ஒன்றா..?
பெரும்பாலும் நம்மில் பலரும் இஞ்சி மற்றும் சுக்கு இரண்டும் வேறு என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உலர்ந்த இஞ்சியை தான் நாம் சுக்கு என்று சொல்கிறோம். அதாவது இஞ்சியை நன்றாக காயவைத்து எடுத்தால் அது தான் சுக்கு ஆகும். இந்த உலர்ந்த இஞ்சி Dried Ginger என்று சொல்லப்படுகிறது.
எனவே இஞ்சியில் இருந்து தான் சுக்கு வருகிறது. உடனே நமக்கு இன்னொரு சந்தேகம் வரும். அதாவது, இஞ்சியை விட சுக்குக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இஞ்சியில் இருந்து தானே சுக்கு வருகிறது. அப்போ இஞ்சியில் இருக்கும் நன்மைகள் தானே சுக்கிலும் இருக்கும் என்று யோசிப்போம்.
ஆனால் இஞ்சி சுக்கு இரண்டும் ஒரே பொருளாக இருந்தாலும், இவை இரண்டிலும் இருக்கும் மருத்துவ குணங்கள் வேறுபடுகின்றன. அவை என்னவென்று இப்பதிவில் பின்வருமாறு காணலாம்.
இஞ்சி பயன்கள்:
- இஞ்சியில் இருக்கும் பண்புகள் உடலில் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
- இஞ்சி பசியுணர்வை தூண்டுகிறது.
- ஒற்றை தலைவலியை சரி செய்யும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது.
- ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி பல்வேறு நன்மைகளை செய்கிறது.
- வயிற்று கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- குமட்டல் வாந்தி மற்றும் அஜீரண கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.
- மூட்டு மற்றும் தசை வலிகளை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.
- புற்றுநோய் செல்களை அடியோடு அளிக்க இஞ்சி உதவுகிறது.
மேலும் இஞ்சியில் இருக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
சுக்கு பயன்கள்:
- வயிற்றில் இருக்கும் எரிச்சல் முற்றிலும் நீங்க சுக்கு பயன்படுகிறது.
- மூட்டு வலி இருப்பவர்கள் பாலுடன் சுக்கை அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வர வலி உடனே சரியாகும்.
- தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுக்கு பயன்படுகிறது.
- தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சுக்கை உரசி பெருங்காயத்தூளுடன் நெற்றியில் பற்றுப்போட அனைத்தும் உடனே நீங்கிவிடும்.
- வாய் துர்நாற்றம் நீங்க சுக்கு பயன்படுகிறது.
மேலும் சுக்குவில் இருக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
சுக்கு பயன்கள் பற்றி தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |