வெயில் கால டிப்ஸ் | Summer Season Health Care Tips in Tamil
வெயில் காலம் வந்துவிட்டாலே உடலில் பல நோய்களும் வந்துவிடும். ஒவ்வொருவருக்கும் மே மாதம் வந்துவிட்டாலே விடுமுறை ஒரு பக்கம் இருந்தாலும் கொளுத்தும் வெயில் ஒரு பக்கம் நம்மை வாட்டி வதக்கும். இந்த நேரத்தில் நாம் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல் உபாதைகள் ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்ளலாம். அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் மிக கடுமையான அளவிற்கு இருக்கும். நம்மால் வீட்டில் கூட இருக்க முடியாத நிலை ஏற்படும். வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் நாம் நம்மளை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சில ஆரோக்கிய டிப்ஸ்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ் |
டிப்ஸ்: 1
மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் சற்று அதிகமாவே காணப்படும். இந்த வெப்பமானது காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரையிலும் வெயில் நீடித்து காணப்படுகிறது. இந்த நேரத்தில் வெயிலில் அதிகம் நடமாடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அப்படி கட்டாயமாக வெளியில் செல்ல வேண்டும் என்பவர்கள் 10 மணிக்குள் தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள பாருங்கள். தொடர்ந்து வெயிலில் செல்பவர்களாக இருந்தால் ஆங்காங்கே இருக்கும் மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சென்றால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
டிப்ஸ்: 2
வெயில் காலத்தில் பலருக்கும் அதிக வியர்வை ஏற்பட்டு உடலில் இருந்து அதிக நீரானது வெளியேறுகிறது. இந்த வெயில் காலங்களில் நைலக்ஸ், பாலிஸ்டர் போன்ற துணிகளில் செய்யப்பட்ட ஆடைகள் அணிவதை தவிர்த்துவிட்டு தூய பருத்தி ஆடைகளை அணிவது உடலுக்கு மிகுந்த நல்லது. பருத்தி ஆடைகளை அணிவதால் உடலில் அதிக வெப்ப தாக்கத்தினை ஏற்படுத்தாது.
டிப்ஸ்: 3
உச்சி வெயிலில் கட்டாயம் வெளியில் செல்ல இருப்பவர்கள் தலையில் கண்டிப்பாக வெள்ளை நிறத்தில் உள்ள தொப்பியை கட்டாயமாக அணிந்த பிறகு வெளியில் செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் பருத்தியால் ஆன ஒரு துண்டை எடுத்து தலை மற்றும் கழுத்து பகுதியை மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் தலையில் அதிக வெயில் படாமல் உடல் சூட்டிலிருந்து தப்பிக்கலாம்.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..! |
டிப்ஸ்: 4
வெயில் காலம் வந்துவிட்டாலே சாலைகளில் குளிர் கண்ணாடிகள் அதிகமாக விற்பனை செய்வார்கள். சாலையோரங்களில் விற்கப்படும் குறைந்த விலை கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது நல்லது. வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதித்து, உங்கள் கண்களின் தன்மைக்கு ஏற்ப தரமான குளிர் கண்ணாடிகளை வாங்கி அணிந்துகொண்டால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.
டிப்ஸ்: 5
நல்ல உச்சி வெயிலில் விளையாடிவிட்டு வீட்டில் இருக்கக்கூடிய சிறுசுங்க குளிர்சாதனப்பெட்டியில் இருக்கக்கூடிய தண்ணீரை அப்படியே அருந்துவார்கள். இதற்கு பதிலாக வீட்டில் மண் பானை அமைத்து அதில் நீர் ஊற்றி குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
டிப்ஸ்: 6
அக்னி நட்சத்திர காலத்தில் கடுமையான வெயில் ஏற்பட்டு வியர்வை அதிகம் ஏற்படுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். இதனால் உடலில் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த நேரங்களில் அடிக்கடி பழங்கள் சாப்பிடுவது, நீர் அதிகமாக பருகுவதன் மூலம் உடலில் எப்போதும் நீர் சத்து குறையாமல் இருக்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |