Summer Season Diseases In Tamil
மக்கள் அனைவரும் ஒவ்வொரு கால பருவத்திலும் அதற்கேற்ற உடலில் நோய்களை எதிர்கொள்கின்றனர். அதிலும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் உடல் மிகவும் பாதிக்கப்படுகிறது. கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் உடல் சூடு, மயக்கம், தலைசுற்றல் என நிறைய பிரச்சனைகள் உண்டு. அப்படி கோடை காலத்தில் அதிகம் வரும் நோய்கள் மற்றும் அதிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வியர்க்குரு
கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை இந்த வியர்க்குரு தான். கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் தோலில் வறட்சி ஏற்பட்டு இந்த வியர்க்குரு உண்டாகிறது. இது அசௌகரியமான உணர்வை கொடுக்கிறது. இந்த வியர்க்குருவை எப்படி கண்டறிவது என்பதும் சில பேருக்கு தெரியாது. கீழே வியர்குருவின் அடையாளங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வியர்க்குரு அறிகுறிகள்
- தோலில் ஏற்படும் அரிப்பு
- சிவப்பு தடிப்புகள்
- வியர்க்கும் இடத்தில் அரிப்பு
- அரிப்பு இடத்தில சிறிய கொப்புளங்கள்
வியர்குருவை தடுப்பது எப்படி ?
- வியர்க்குரு வருவதுபோல் அறிகுறி தெரியும்போதே வீட்டு வைத்தியங்கள் எடுத்து கொண்டால் ஆரம்பத்திலே அதனை தடுக்கலாம்.
- வியர்வை உறிஞ்சும் காட்டன் பருத்தி ஆடைகளை அணிவதனால் வியர்குருவை தடுக்க முடியும்.
- வியர்க்கும்போது குளிர்ந்த இடங்களில் உடலை உலர்த்த வேண்டும்.
- வியார்குருவை சொரிய சொரிய அது இன்னும் உடலில் அதிகமாகும். அதனால் அதிகம் சொரிய கூடாது.
ஹீட் ஸ்ட்ரோக்
கோடை காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் என்பது வெயில் காலத்தில் பாதிக்க கூடிய ஒன்று. சிலருக்கு ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்னவென்று தெரியாது. அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் உண்டாகும் வெப்ப பக்கவாதம் ஆகும். சராசரியாக உடலில் 104 டிகிரிக்கு ஃபாரன்ஹீட் அல்லது 40 டிகிரி செல்சியஸ் மேல் அதிகமானால் ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகிறது. இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் உடலின் தசைகளை பாதிக்கிறது. அதிமாகும் நிலையில் உயிருக்கும் பாதிப்பு உண்டாகும்.
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
- உடலில் சராசரியை விட அதிகமான வெப்பநிலை
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- வேகமான இதய துடிப்பு
- சரும நிறத்தில் உண்டாகும் மாற்றம்
ஹீட் ஸ்ட்ரோக் தடுக்கும் முறைகள்
- வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்லாதீர்கள்.
- வெளியே செல்லும்போது வெப்பம் மேலே படாதவாறு ஆடை அணிந்துகொள்ளுங்கள். உடலை முழுமையாக கவர் செய்து கொள்ளுங்கள்.
- தண்ணீர் அதிகமாக குடியுங்கள். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.
நீரிழப்பு
அதிக வெப்பத்தால் உடலில் வியர்வை அதிகம் ஏற்படுவதால். நாம் குடிக்கும் தண்ணீர் வியர்வை வழியாக வெளியேற்றம் ஆகிவிடுகிறது. இதனை ஈடு கட்ட நாம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் நீரிழப்பு உடலில் ஏற்படுகிறது.
நீரிழப்பு அறிகுறிகள்
- பசியின்மை
- தலைவலி
- எவ்ளோ தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காத உணர்வு
- மஞ்சள் நிற சிறுநீர்
- உடலில் ஏற்படும் சோர்வு
- தோலில் உண்டாகும் வறட்சி
- வறண்ட வாய்
நீரிழப்பு தடுக்கும் முறைகள்
- தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
- பழங்கள், காய்கறிகளில் அதிகம் நீர் சத்து உள்ளவற்றை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
- கோடை காலத்தில் அதிக காரசாரமான உணவுகளை தவிருங்கள்.
- அதிகம் குளிர்ச்சி தரக்கூடிய ஜூஸ் மற்றும் இளநீர்,மோர் போன்ற நீர் ஆதாரங்களாக குடியுங்கள்.
- தாகம் அடிக்கும்போது மட்டும் தண்ணீர் அருந்தாமல், உடலுக்கு தேவையான தண்ணீரை பருகுங்கள்.
மஞ்சள் காமாலை
கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் பலர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படுகின்றனர். இது அதிக வெப்பத்தால் உடல் பாதிக்கும்போது உண்டாகிறது. மேலும் தீவிரம் அடைந்தால் கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும். சுகாதாரம் இல்லாத தண்ணீர் மற்றும் உணவுகளை உட்கொள்வதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்
- தோலில் உண்டாகும் அரிப்பு
- கருமை நிறத்தில் சிறுநீர் போவது
- மஞ்சள் நிற கண்கள்
மஞ்சள் காமாலை தடுக்கும் முறைகள்
- உயரத்திற்கு ஏற்ற கொழுப்பில்லாத எடை பராமரிப்பு
- கொழுப்புகள் மற்றும் எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது
- மது போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- உடலை குளிர்ச்சியாக வைக்க குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளுதல்.
கோடை காலத்தில் வீட்டை குளுமையாக வைத்து கொள்வது எப்படி.?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |