நீங்க சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுபவரா..! அப்படினா அதுல என்னென்ன தீமைகள் இருக்கு தெரியுமா..?

 Sweet Potato Side Effects 

பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய் என்றால் எது கிழங்கு வகைகள் தான். அதுமட்டும் இல்லாமல் கிழங்கு வகைகளில் என்ன மாதிரியான ரெசிபியினை செய்து வைத்து இருந்தாலும் அதனை வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவார்கள். நாம் சாப்பிடும் எந்த கிழங்கு வகையாக இருந்தாலும் கூட அதில் நன்மைகள் இருப்பது போல நமக்கு தெரியாத சில தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் நாம் அனைவரும் சக்கரைவள்ளி கிழங்கு பற்றி கேள்வி பட்டிருப்போம் மற்றும் அதிகமாக உணவில் சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று சக்கரை வள்ளி கிழங்கின் தீமைகள் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்… 

சர்க்கரைவள்ளி கிழங்கின் சத்துக்கள்:

  • வைட்டமின் A
  • வைட்டமின் B
  • வைட்டமின் C
  • பொட்டாசியம்
  • நார்ச்சத்து
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • இரும்புச்சத்து
  • ஆன்டி ஆக்ஸிடன்ட்

சர்க்கரைவள்ளி கிழங்கு தீமைகள்:

இதயத்தில் பிரச்சனை:

இதய பிரச்சனை

சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம் சத்து இருக்கிறது. அதனால் நாம் சர்க்கரைவள்ளி கிழங்கினை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து மாரடைப்பு போன்ற இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

சிறுநீரக கல்:

சிறுநீரக கல்

ஆன்டி ஆக்ஸிடன்ட் சர்க்கரைவள்ளி கிழங்கில் இருப்பதால் இதனை அளவுக்கு அதிகமாக நாம் சாப்பிடுவதனால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் முன்பே பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொள்வதனால் சில காலகட்டத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

வயிற்றில் வீக்கம்:

வயிற்று வலி

நார்ச்சத்து நிறைந்த கிழங்காக சர்க்கரைவள்ளி கிழங்கு இருப்பதால் இதனை நாம் சரியான அளவில் சாப்பிடாமல் அதிகமாக எடுத்துக்கொள்வதனால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

அதாவது செரிமான கோளாறு, வயிறு வீக்கம், வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தலைவலி:

தலைவலி

பொதுவாக நாம் வைட்டமின் A சத்து நிறைந்துள்ள காய்கறிகளை அளவோடு தான் எடுத்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற காய்கறிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் அலர்ஜி மற்றும் தலைவலி போன்ற தீமைகளை ஏற்படுத்தும். வைட்டமின் A சத்து அடங்கியுள்ள காய்கறிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கும் அடங்கும். அதனால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோய்
 

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கினை அளவோடு தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அதிகமாக சாப்பிடுவதனால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கருணை கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்