மாத்திரை சாப்பிடும் முறை
நம் முன்னோர்கள் காலத்தில் வயதான பிறகு நோய் நொடிகள் ஏற்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சரி, அந்த குழந்தை பிறந்த பிறகும் நோய்கள் வந்து விடுகிறது. இந்த நோய்கள் சரி ஆகுவதற்காக பலரும் எடுத்து கொள்வது மாத்திரை தான். அப்படிப்பட்ட மாத்திரையை எப்படி சாப்பிட வேண்டும், மாத்திரை சாப்பிட்ட பிறகு எந்த உணவுகள் சாப்பிட கூடாது என்பதை இந்த அபதவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
மாத்திரை சாப்பிடும் முறை:
மாத்திரைகள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை பொறுத்து செயல்படுகின்றன. மாத்திரையை உணவுக்கு முன் மற்றும் உணவுக்கு பின் என இரண்டு வகைகளாக எடுத்து கொள்கின்றனர்.
நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.
நீங்கள் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் வாயில் சிறிதளவு தண்ணீர் வைத்து அதில் மாத்திரையை போட்டு விழுங்க வேண்டும். இப்படி விழுங்குவதால் உணவு குழாயில் தடை இல்லாமல் செல்லும். மாத்திரை விழுங்கிய பிறகு நான்கு முதல் ஐந்து மடங்கு நீரை பருக வேண்டும்.மாத்திரை சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்:
மாத்திரை சாப்பிட்ட பிறகு கீரை சார்ந்த உணவுகளை சாப்பிட கூடாது. வைட்டமின் K சார்ந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு மாத்திரையை சாப்பிட கூடாது.
மாத்திரையை டீயுடனோ அல்லது மாத்திரை சாப்பிட்ட பிறகு டீ குடிக்க கூடாது. மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்க பச்சை தேயிலை வேலை செய்யும். அதனால் எந்த விதமான தேநீருடன் மாத்திரை சாப்பிட கூடாது. அதனால் மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது மாத்திரை சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பு பால் அல்லது காபி டீ குடிக்கலாம்.சாதாரணமாக மது அறுவது கல்லீரலில் பிரச்சனையை ஏற்படும். அதோடு நீங்கள் மாத்திரை சாப்பிட்டு விட்டு மது அருந்தினால் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
Rablet D மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |