கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் யாராவது ஒருத்தருக்கு தான் புற்றுநோய் பிரச்சனை வரும். ஆனால் இன்றைய காலத்தில் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதிக்கின்றனர். அதில் பெண்களை தாக்கக்கூடிய புற்றுநோய்களில் நான்காவது புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இந்த புற்றுநோயை ஆரம்ப ஸ்டேஜில் பார்த்து விட்டால் அதை குணப்படுத்துவது எளிது.
புற்றுநோயால் பலரும் உயிரை இழப்பதற்கான நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதத்தில் அரசு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த தகவலை பற்றி அறிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசு செய்தது:
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 1 முதல் 14 வரையிலான சிறுமிகளுக்கு hpvதடுப்பூசிக்கு நிதி கொடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதை முடிவு எடுத்திருப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், இதனால் ஏற்படும் இறப்பை குறைப்பதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக அரசு 21,906 கோடிஒதுக்கியுள்ளது. இதில் 110 கோடி புற்றுநோயை ஆரம்பத்திலையே கண்டறியும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அரசு எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது 2030-ம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!
HPV தடுப்பூசி:
இந்த ஊசி ஆனது புற்றுநோய் வந்த பிறகு போடுவது அல்ல, புற்றுநோய் வருவதற்கு முன் போட வேண்டும். இந்த தடுப்பூசியை 1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
கர்ப்பப்பை புற்றுநோய் அறிகுறிகள்:
நம்முடையாய் உடலில் எந்த பிரச்சனையும் வந்த பிறகு சரி செய்வதை விட வரும் முன் அதனை காக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு நோயின் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் புற்றுநோய்க்கும் அறிகுறிகள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகள் இருக்கிறது. அந்த வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்வோம்.
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- உடலுறவுக்கு பின் இரத்தபோக்கு ஏற்படுதல்
- மாதவிடாய் காலத்திற்கும் பிறகும் இரத்தப்போக்கு
- கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் தொடர்ந்து வலி ஏற்படுதல்
- உடல் சோர்வு
- எடை இழப்பு
- கால்களில் வீக்கம்
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |














