பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இதை கண்டிப்பாக செய்யுங்கள்.!

Advertisement

பற்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்

வணக்கம் நண்பர்களே..! உணவுகளை மென்று சாப்பிடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பற்கள் தான். உடலில் இருக்கும் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்களுக்கு கொடுப்பதில்லை. அதனால் தான் சிறு வயதிலே குழந்தைகளை பல் பிரச்சனை ஏற்படுகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி படித்திருப்பீர்கள். சிரிக்கும் போது நம்மை அழகாக காட்டுவதே பற்கள் தான். வாயில் பற்கள் இல்லை என்றால் ஒழுங்காக பேச முடியாது. பேச கூடிய வார்தைகள் சரியாக புரியாது. பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள சில வழிமுறைகளை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் பல் வலி பிரச்சனைகள் இரண்டே நிமிடத்தில் குணமாக இதை செய்து பாருங்கள்.!

பல் துலக்குவது எப்படி.?

பல்லை இரண்டு தடவை துலக்க வேண்டும். அதாவது காலை மற்றும் மாலை இருவேளையும் பல் துலக்க வேண்டும். பல்லை குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் வரை பல்லை தேயுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பிரெஷ் சாப்டாக இருக்க வேண்டும். பிரசின் அடிப்பகுதி வளைய கூடியதாக இருக்க வேண்டும். கடினமான பிரெஷ் கொண்டு பல் துலக்குவதை தவிர்க்கவும்.

வாய் கொப்பளிப்பது:

உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் வைத்து வாயை கொப்பளித்து விடுங்கள். பற்களின் இடையில் இடைவெளி இருக்கும் இடத்தை பிரஷை வைத்து துலக்கும் போது கவனமாக செய்யவும்.

பல் பரிசோதனை:

குழந்தைகளுக்கு 7 வயதில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அப்போது பல் மருத்துவரை அணுகி பற்கள் சரியான முறையில் வளர்ச்சி அடைகிறதா என்று பரிசோதித்து கொள்ள வேண்டும்.

பற்கள் சொத்தை:

நம் முன்னோர்களுக்கு வயதானால் பற்கள் பலவீனம் மற்றும் சொத்தை ஏற்படும்.  ஆனால் இப்போது அப்படி இல்லை. பல் எப்போது முளைக்க ஆரம்பிக்கிறதோ அப்போதிலுருந்து பிரச்சனை ஆகிறது. இதற்கு காரணம் உணவு முறைகள் தான். குளிர்ச்சியாக உள்ள ஜூஸை குடிக்க தான் விரும்புகிறோம். குளிர்ச்சியான பானங்களை அதிகம் குடித்தால் நமது பல்லிற்கு ஆரோக்கியம் இல்லை என்று ஆய்வுகளில் கூறியுள்ளனர். தவிர்க்க முடியாமல் குளிர் பானங்கள் அருந்தினால் உடனே வாய் கொப்பளித்து விட வேண்டும்.

பற்களை கடிப்பது:

கவர்களை பிரிப்பதற்கு கத்தரிக்கோல் கிடைக்கவில்லை என்றால் உடனே வாயால் கடிக்கும் பழக்கம் நிறைய நபர்களிடம் உள்ளது. கை மற்றும் உதட்டை சப்பும் பழக்கம், பற்களை கடிப்பது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்.

இனிப்பு வகைகள்:

இனிப்பு சம்மந்தமான உணவுகளை உட்கொண்டவுடன் உடனே வாய் கொப்பளித்து விடுங்கள். அதிலும் இரவில் உணவு மற்றும் பால் குடித்த பிறகு வாயை கொப்பளித்து விடுங்கள். இல்லையெனில் பூச்சி பல் ஏற்படும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement