தினமும் தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகள்
வணக்கம் நண்பர்களே..! இன்று நம் பதிவில் நம் பாரம்பரிய உணவு பொருளான தயிரின் நன்மைகள் மற்றும் அதன் தீமைகளை பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நம் உணவு பழக்கங்களில் சாம்பார், ரசம், பாயசம் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு கடைசியாக சாப்பிடும் உணவு பொருள்தான் தயிராகும். இப்படி கடைசியாக சாப்பிடுவதற்கான அவசியம் என்ன தெரியுமா? செரிமான கோளாறுகள் ஏற்படாது. சீக்கிரமாக ஜீரணமாகிவிடும். தயிரில் பலவகையன சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் தீமைகளை அறியலாம் வாங்க..
யோகர்ட் தயிர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் |
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- தயிர் சாப்பிடுவதால் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவுகளை உட்கொள்ளும் பொழுது தயிர் சேர்த்து சாப்பிட்டால் எந்தவிதமான செரிமான கோளாறுகளும் ஏற்படாது.
- அல்சர் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அடைவதற்கு தயிர் சாப்பிட்டால் சரியாகிவிடும்.
- தலையில் ஏற்படும் பொடுகு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தயிர் சரிசெய்கின்றது.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது.
- மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிடுவது நல்லது.
- வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிடுவதால் சரியாகிவிடுகிறது.
- உப்பு மாற்று சர்க்கரையுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும்.
- மலக்குடல் எரிச்சல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தயிரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் எரிச்சல் நீங்கிவிடும்.
- தயிரில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால் பற்களுக்கும், எலும்புகளுக்கு அதிகம் நன்மைகளை தருகிறது.
- உடல் எடையை குறைப்பதற்கும் தயிர் ஒரு முக்கிய பொருளாக உள்ளது.
- அதிகமான வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தயிரில் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடனடியாக குணமாகிவிடும்.
- வயிற்று வலி பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
- தயிரில் அதிகம் குளிர்ச்சி இருப்பதால் சளி பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
- ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிர் எடுத்துக்கொள்ள கூடாது, அப்படி தயிர் எடுத்து கொண்டால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும்.
- சூடான சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிட கூடாது. ஏனென்றால் சூடான சாதத்தில் சேர்ப்பதன் மூலம் தயிரில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
- தயிரை இரவு நேரங்களில் சாப்பிட கூடாது.
- தொடர்ந்து தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் அக்கி, வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- தயிருடன் கீரை மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.
- மருந்து மாத்திரை சாப்பிடும் பொழுது தயிர் சேர்த்து சாப்பிட கூடாது அப்படி சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தை அதிகப்படுத்தும்.
- மீன், கருவாடு போன்ற உணவு பொருட்களை சாப்பிடும் பொழுது தயிரை தவிர்ப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |